பொகவந்தலாவ லோய்னோன் தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகிய 09 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி .
பொகவந்தலாவ லோய்னொன் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 09பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் 03.03.2018.சனிக்கிழமை காலை 11மணிஅளவில் இடம் பெற்றுள்ளதாகவும் குளவி கொட்டுக்கு இலக்கான 09பெண் தொழிலார்களும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
தேயிலை மலையில் இருந்த குளவி கூடு கலைந்ததன் காரணமாகவே இந்த தொழிலாளர்களை தாக்கியதாக தெரிவிக்கபடுகிறது.
காயங்களுக்கு உள்ளான 09 பெண் தொழிலாளர்களை குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லையெனவும் வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எஸ்.சதீஸ்