பொகவந்தலா அரச வைத்தியசாலை சூழல் சுத்தம் செய்யும் சிரமதான பணி 21.04.2018 இடம்பெற்றது.
பொகவந்தலாவ தெற்கு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட செப்பல்டன் உதயம் முதியோர் கழகத்தினால் மேற்படி சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது.
உதயம் முதியோர் கழகத்தின் ஒராண்டு நிறைவை முன்னிட்டு இடம்பெற்ற சிரமதான பணியில் பொகவந்தலாவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் ,பௌத்த விகாரதிபதி பிரதேச கிராம உத்தியோகஸ்தர், சுகாதார பரிசோதகர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்