பொங்கலன்று நுவரெலியா, பதுளையில் மதுபானசாலைகளுக்கு பூட்டு

0
35

தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை பதுளை, நுவரெலியா மாவட்டங்களில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்வி இராஜாங்க அமைச்சருமான அ. அரவிந்குமார் தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்;

” தமிழர்களின் புனித திருநாளான தைப்பொங்கல் தினத்தன்று மூட நடவடிக்கை எடுக்குமாறு மதுவரித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்திடம் தாம் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, பணிப்பாளர் நாயகம் இந் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதன்மூலம் மதுவற்ற பொங்கல் திருநாளை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்விரு மாவட்டங்களிலும் இயங்கும் மதுபான சாலைகளில் அதிகமான தோட்டப்புற இளைஞர்களே கடமையாற்றி வருகின்றனர். அவர்கள் தமது குடும்பங்களுடன் பண்டிகையை கொண்டாடி மகிழ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here