“பொடுகு தொல்லையால் அவஸ்தையா..!” – இந்த டிப்ஸை பயன்படுத்தி பாருங்க…..

0
165

பெரும்பாலான பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இன்று தலை முடி பிரச்சனை அதிக அளவு உள்ளது. அதிலும் முடி உதிர்களுக்கு அடுத்தபடியாக அந்த முடி உதிர்வுக்கு காரணமான பொடுகு தொல்லை இன்று விஸ்வரூபமாக வளர்ந்து இவர்களை பாடாய்படுத்தி வருகிறது.

Dandruff, Dandruff Removing Tips, Olive Oil, ஆலிவ் ஆயில், பொடுகு, பொடுகு நீங்க உதவும் டிப்ஸ்

அப்படிப்பட்ட பொடுகு தொல்லையில் இருந்து நீங்கள் விடுதலை பெற வேண்டும் என்றால் எந்த கட்டுரையை கூறியிருக்கும் டிப்ஸை ஃபாலோ செய்தாலே போதும். மிக எளிதில் நீங்கள் பொடுகு தொல்லையிலிருந்து விடுதலை பெற முடியும்.

பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை அடைய உதவும் டிப்ஸ்
டிப்ஸ் 1
செம்பருத்தி மற்றும் வெந்தயம் இவை இரண்டையும் நன்கு ஊற வைத்து ஒரு ஹேர் பேக் செய்து நீங்கள் உங்கள் தலையில் அப்ளை செய்து குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் அப்படியே இருந்து பிறகு குளித்து வருவதன் மூலம் உங்கள் தலையில் இருக்கும் பொடுகை எளிதாக விரட்டி அடிக்கலாம்.

டிப்ஸ் 2
வேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து உங்கள் தலைமுடியில் 20 நிமிடங்கள் அப்படியே மசாஜ் செய்து தேய்த்து விடவும். பிறகு உங்களது முடியை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதின் மூலம் ஒரே வாரத்தில் பொடுகு தொல்லையிலிருந்து நீங்கள் நிவாரணம் பெற முடியும்.

டிப்ஸ் 3
வாழைப்பழம் மற்றும் ஆலிவ் வாயிலை எடுத்துக் கொள்ளுங்கள். பழுத்த வாழைப்பழத்தை நன்கு மசித்து அதில் ஆலிவ் ஆயிலையும் சேர்த்து விடுங்கள். தேவைப்பட்டால் எலுமிச்சம் பழச்சாறையும் நீங்கள் சிறிதளவு ஊற்றிக் கொள்ளலாம். எந்த ஹேர் மாஸ்கை நீங்கள் 30 நிமிடம் உங்கள் கூந்தலில் வைத்திருங்கள். பிறகு வெதுவெதுப்பான நீர் கொண்டு ஷாம்புவை பயன்படுத்தி நீங்கள் வாஷ் செய்வதின் மூலம் எளிதில் உங்களது பொடுகு நீங்கும்.

டிப்ஸ் 4
ஆலிவ் ஆயில், முட்டை இவை இரண்டையும் கலந்து உங்கள் முடிகளில் தடவி விடுங்கள். பிறகு 20 நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் தலைக்கு குளித்தால் போதுமானது. பொடுகு தொல்லையிலிருந்து நீங்கள் விடுதலை அடைய முடியும்.

டிப்ஸ் 5
Dandruff, Dandruff Removing Tips, Olive Oil, ஆலிவ் ஆயில், பொடுகு, பொடுகு நீங்க உதவும் டிப்ஸ் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் டீட்ரீ ஆயில் இவை இரண்டையும் ஒன்றாக கலந்து உங்கள் தலைகளில் நன்கு தேய்த்து விடுங்கள். குறைந்தபட்சம் 20 நிமிடங்களுக்குப் பிறகு சாதாரண நீரில் உங்கள் முடிகளை அலசி விடுங்கள். இப்படி செய்வதின் மூலம் உங்களுக்கு பொடுகு தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.

டிப்ஸ் 6
எலுமிச்சைச் சாறு, தயிர் தேன் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து உங்கள் உச்சந்தலையில் நன்கு தடவி விடவும். 30 நிமிடங்கள் கழித்து நீங்கள் ஷாம்பு போட்டு குளிப்பதின் மூலம் உங்களுக்கு பொடுகு தொல்லை ஏற்படாது.

மேற்கூறிய இந்த குறிப்புக்களை நீங்கள் கவனத்தோடு ஃபாலோ செய்வதின் மூலம் பொடுகு தொல்லையில் இருந்து முற்றிலும் விடுதலை பெற முடியும் என்பதை நம்புங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here