பொதுமக்களுக்கு பொலிசார் விடுக்கும் எச்சரிக்கை பதிவு!!

0
114

தமக்கு தெரியாத இடங்களுக்கு நீராடச் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.கடந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் நீராடச் சென்று உயிரிழந்த சம்பவங்கள் பதிவாகியிருந்தன.

கடந்த வருடம் இவ்வாறான 727 மரணங்கள் பதிவாகியிருந்தன. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாத காலப்பகுதிக்குள் 93 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் கவனக் குறைவு காரணமாகவே உயிரிழந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் காலநிலை காரணமாக நீராடிக் கொண்டிருக்கும் போது ஒரேயடியாக பெரியளவில் நீர் வழிந்தோடி வரலாம். உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உள்ள இடங்களில் மாத்திரம் நீராடுமாறு பொலிஸார் மக்களை கேட்டுள்ளனர்.

ஆபத்து எச்சரிக்கை தொடர்பில் பொருத்தப்பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் உள்ள ஆலேசனைகளை பின்பற்றுமாறும் மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.கடந்த வருடம் 94 உயிர்களையும், இந்த வருடம் 25 பேரையும் இலங்கை பொலிஸாரின் உயிர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காப்பாற்றியுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here