பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரனின் மறைவு ஈடுசெய்ய முடியாதொன்றாகுமென்று சோ.ஸ்ரீதரன் தெரிவிப்பு!!

0
78

மலையகத்தின் பொகவந்தலாவை மண்ணின் மைந்தன் பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரனின் மறைவு ஈடுசெய்ய முடியாதொன்றாகுமென்று மத்திய மாகாணசபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.அந்தச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :
கலையுலகில் பல்துறை ஆற்றல் மிக்கவராக செயற்பட்ட ஏ.ஈ. மனோகரன் இலங்கையின் இசைத்துறையில் சகல இனமக்களின் பேரபிமானத்தைப் பெற்றவராவார்.

நாவலப்பிட்டி சென்மேரிஸ் , அட்டன் பொஸ்கோ , யாழ்ப்பாணம் ஹாட்லி ஆகிய பாடசாலைகளின் பழைய மாணவராவார். இலங்கையின் பைலா வகைப்பாடலான சுராங்கனி பாடலை உலகெங்கும் பிரபல்யப்படுத்தினார். இந்தப்பாடலை இந்திய சினிமாவிலும் இடம் பெறுவதற்கு முதன்மையாக செயற்பட்டவர். ஈழத்து தமிழ் சினிமா துறையின் முன்னோடியாக செயற்பட்டதோடு இந்திய திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தவர்.

அன்னாரின் பிரிவால் துயருறும் அன்னாரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

தலவாக்கலை பி. கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here