புகழ்பெற்ற பொப்பிசை சக்கரவர்த்தியும் நடிகருமான ஏ.ஈ.மனோகரன் காலமானார்.
இலங்கையின் பொப்பிசை பாடகரும் நடிகருமான ஏ.ஈ.மனோகரன் 73வது வயதில் கலமானார் இவர் 22.01.2018.திங்கள் கிழமை இரவு சென்னையில் வைத்து காலமானதாக தெரிவிக்கபடுகிறது.
இவர் பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்த இவர் இலங்கையில் இவரின் பொப்பிசை பாடலான சுராங்கெனிக்க மாலு கெனாவா என்ற பாடல் இல்ஙகை ரசிகர்கள் மத்தியிலும் இந்தியா ரசிகர்கள் மத்தியிலும் இந்த படல் பெறும் வரவேட்பை பிடித்திருந்தது.
இது மட்டுமல்லாமல் இவர் தமிழ் சிங்களம் ஹிந்தி போன்ற மொழிகளில் இவர்பல பாடல்களை பாடியிருப்பதோடு இந்தியாவில் சிவாஜிகனேசன் கமலஹஷன் ரஜிகாந் ஆகியோரோடு இனைந்து பல திரைபடங்களில் நடித்துள்ளதோடு ஆரம்பகாலத்தில் பல்வேறு மேடைநாடகங்களிலும் நடித்திருக்கிறார்.
இவர் நீண்டகாலமாக சுகயினமுற்ற நிலையிலே காலமானதாக ஏ.ஈ.மனோகரனின் புதல்வர் பாபு தெரிவித்தார்.
எனவே இவரின் இறுதிகிரியைகள் இந்தியாவின் சென்னையில் இடம் பெறவிருப்பதோடு அவருடைய அஸ்தி இலங்கைக்கு கொண்டு வரபடவுள்தாக அவரின் புதல்வர் மேலும் குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்