பொய்யான தகவல்களை சமூகவளைத்தளங்களில் வெளியிடுவோருக்கு எதிராக கடும்நடவடிக்கை எடுக்கப்படும்!!

0
108

பொய்யான தகவல்கள் மற்றும் மோசமான வௌியீடுகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய அதிகூடிய சட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சிபார்சுகளை முன்வைக்குமாறு, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு , சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான அமைச்சு , தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச்சு , தொலைத்தொடர்புகள் ஒழுங்கப்படுத்தல் ஆணைக்குழு ஆகிய நிறுவனங்களுக்கு அறிவுறுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதேபோல் , கடந்த தினத்தில் கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நட்டஈடுகளை வழங்க நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here