கல்வி அதிகாரிகளின் பொருப்பற்ற செயப்பாடுகளால் கல்வி சீர்குலைவாதாக தேசிய ஜனாநாயக ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். பாலசேகரம் குற்றம் சாட்டியுள்ளார்
இன்று (30) திகதி தலவாக்கலை பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் .நாட்டில் தற்போது உள்ள சூழ்நிலையில் இணையவழி மூலமான கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கல்வி வலயத்தில் ஒரு கோட்டத்தில் ஒரு பாடத்திற்கு சுமார் 500 மாணவர்கள் காணப்படுகின்ற போது இணைய வழி மூலமாக சுமார் 150 மாணவர்களே கலந்து கொள்கின்றனர்.இலவச பாடநூல் இலவச சீருடை,இலவச கல்வி வழங்கப்பட்டு வருகின்றமையினாலேயே கடந்த காலங்களில் எமது ஏழை பெற்றோர்களின் பிள்ளைகள்,பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். தற்போது இம்மாணவர்களுக்கு இணைய வழியில் இணைந்து கொள்ள முடியாமையினால் ஏழை பெற்றோர்களின் பிள்ளைகள் மன அழுத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
தோட்டத்துறையினை பொருத்தவரையில் ;தொழிலாளர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றனர் அவர்களுக்கு தற்போது சம்பளமில்லாத நிலையே காணப்படுகின்றனர் இந்நிலையில் அவர்கள் எவ்வாறு பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் தொலைபேசி வாங்கி கொடுப்பார்கள் அது மட்டு மல்லாது ஒரு வீட்டில் மூன்று பிள்ளைகள் இருந்தால் அவர்கள் மூன்று வகுப்பில் இருந்தால் அவர்களுக்கு மூன்று தொலைபேசிகள் பெற்றுக்கொடுக்க முடியுமா என்பதனை பொருப்பு வாய்ந்தவர்கள் சிந்தக்க வேண்டும்
அதே போன்று ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில்; இணைய வழி கல்வியினை மேற்கொள்ளும் போது சில ஆசிரிய ஆலோசகர்களும் கல்வி அதிகாரிகளும் இணைப்பு ஊடாக உள் நுழைந்து ஆசிரியர்களின் கற்பித்தலை மேற்பார்வை செய்கின்றோம்.என்ற பெயரில் ஆசிரியர்களுக்கு மாணவர்களுக்கும் தொந்தரவாக செயற்படுகின்ற அதே வேளை ஆசிரியர்களையும் கட்டாயபடுத்திவருகின்றனர். மேலும் இணைய வழி கல்வியினை மேற்கொள்ளாத ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் சம்பள உயர்வு உட்பட ஏனைய சலுகைகள் வழங்கப்படாது சில அதிகாரிகள் கூறுவதால் ஆசிரியர்கள் பல்வேறு மன அழுத்ததிற்கு வேதனைக்கும் உட்பட்டுள்ளனர் இதனை பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்,அதே போல பாடசாலை கட்டமைப்புக்குள் இன மத அரசியல் தலையீடுகள் அதிகரித்து வருகின்றமையால் பாடசாலை கட்டமைப்புக்குள் பல்வேறு பொருத்தமற்ற செயற்பாடுகளும் ஊழல்களும் அதிகரித்துள்ளன பாடசாலைக்கு சொந்தமான கட்டடத்திற்கு ஒரு சில பாடசாலைகளில் தனியாரின் பேரில் மின்சார பட்டியல் வருவது.முறை கேடான ஆசிரிய இடம் மாற்றங்கள் (எட்டு வருடத்தை பூர்த்தி செய்யாத ஆசிரியர்களுக்கு இடம்மாற்றம் வழங்குவதும் 10,12 வருடங்களுக்கு மேல் சில ஒரே ஆசிரியர்களுக்கு கடமையாற்றுவதும் சேவையாற்றும் நேர அட்டவணையே இன்றி பாடசாலையில் ஆசிரியர்களை வைத்து மன அழுத்திற்கு உட்படுத்துவது மேலும் அதிபர் இடமாற்றங்கள் முறையாக மேற்கொள்ளாது 10,15,25 வருடங்கள் ஒரே பாடசாலையில் சேவையாற்றுவது பாடசாலையின் பல்வேறு ஊழல்களுக்கும் பொருத்தமற்ற செயற்பாடுகளுக்கும் வழிவகுக்கிறது.
அதே போல் வலய மட்டத்தில் தெரிவு செய்யப்படாத ஆசிரிய ஆலோசகர் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டமை கடந்த சம்பவங்களாக உள்ளன. இவ்வாறான பல்வேறு பிரச்சினைகளின் பின்னணியில் இன மத அரசியல் தலையீடுகள் காணப்படுகின்றமை வேதனையளிக்கின்றன.
அத்தோடு நீண்ட காலமாக இழுபறியாகும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய பொருப்பு வாய்ந்தவர்களின் கடமையும் பொறுப்பும் என அவர் மேலும் தெரிவித்தார்.
கே.சுந்தரலிங்கம்