உலகெங்கும் வாழும் முஸ்லிம் மக்கள் நோம்பு திருநாளான ரமலான் பெருநாளினை இன்று கொண்டாடுகின்றனர் இந்நிலையில் பொளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் தியாக திருநாளான நோம்பு பெருநாளினை இன்று (03) கொண்டாடி வருகின்றனர்.
நோம்பு திருநாளினையொட்டி மலையகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் விசேட பெருநாள் தொழுகைகளும் தூவா பிரார்த்தனைகளும் இடம்பெற்றன.
ஹட்டன் ஜூம்மா பள்ளிவாசலில் நோம்பு பெருநாளினை முன்னிட்டு விசேட பெருநாள் தொழுகை மௌலவி சாஜகான் தலைமையில் இன்று காலை நடைபெற்றன.
பெருநாள் தொழுகையினை தொடர்;ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தீர்ந்து நாட்டு மக்கள் சாந்தி சமாதானத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என விசேட துவா பிரார்த்தனையும் இடம்பெற்றன.
பெருநாள் தொழுகையினை தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித்தழுவி தனது பெருநாள் வாழ்த்தினை தெரிவித்துக்கொண்டனர்.
இந்த வழிபாடுகளில் ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஏராளமான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.
மலைவாஞ்ஞன்