நாவலப்பிட்டி போஹில் தோட்டப்பகுதியில் வசிக்கும் பெண்னொருவர் வாலிபன் ஒருவரை திருமணம் செய்துகொள்வதாக கூறி பணம் மற்றும் தங்க நகைகளை நூதனமாக மோசடி செய்துள்ளார்.இது தொடர்பாக பெண்ணை திருமணம் செய்ய காத்திருந்து ஏமாற்றத்திற்கு ஆளான நுவரெலியா பிரதேசத்தில் வசிக்கும் வாலிபன் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.இந்த முறைப்பாட்டை ஏற்று முறையாக விசாரணை செய்யத்தவறிய நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவர் பெண்ணின் பக்கம் சாதகமாக நடந்துள்ளதோடு வாலிபனைஅச்சுறுத்தல் செய்து பொலிஸ் நிலையத்தில் இருந்து விரட்டியும் உள்ளார்.
இதனையடுத்து நாவலப்பிட்டி பொலிஸாரின் இந்த செயலுக்கு எதிராக குறித்த வாலிபன் ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கடிதமூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
இதன் பயனாக பொலிஸ் மாஅதிபரின் பணிப்புரைக்கு அமைவாக குறித்த வாலிபரின் முறைப்பாடு தொடர்பாக விசேட விசாரணையை கம்பளை பொலிஸ் தலைமையக காரியாலத்தில் பொலிஸ் அத்தியட்சகர் முன்னிலையில் 18/6/2018 காலை நடத்தப்பட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது.
நாவலப்பிட்டி போஹில் தோட்டத்தில் திருமணம் செய்ய பெண் ஒருவரை நுவரெலியாவை சேர்ந்த குடும்பத்தினர் நிச்சயம் செய்துள்ளனர்.இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பெண் கடந்த 05.10.2017 அன்று திருமண வீடு ஒன்றுக்கு சென்றுவர தங்க நகைகள் தேவை என வாலிபரிடம் கூறியதையடுத்து வாலிபரும் தன்வசமிருந்த 12 லட்சம் ரூபாய் பெருமதிவாய்ந்த செயின் மற்றும் கைச்செயின் ,மோதிரம் என வழங்கியுள்ளார்.
இதனை பெற்று சென்ற பெண் திருமண நிகழ்விற்கு செல்ல இதன் பின்னர் 23.10.2018 அன்று மீண்டும் ஒரு கல்யாண வீட்டுக்கு செல்லவேண்டும் இந்த நிகழ்வுக்கு போய் வந்து நகைகளை தருவதாக பெண் தெரிவித்துள்ளார்.
இதன்போது தனது கணக்கிலிடப்பட்டிருந்த பணம் குறைந்து இருப்பதனை அறிந்த வாலிபன் வங்கியின் முகாமையாளரின் உதவியுடன் வங்கி கணக்கை பரீசிலித்துள்ளதுடன் சந்தேகத்தில் வங்கியின் சீசீ டீவின் பதிவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளதோடு இவரின் வங்கி கணக்கில் 80 ஆயிரம் ரூபாய் பணம் இருந்துள்ளதாக வாலிபன் தெரிவித்தார்.
அத்தோடு பெண்ணிடம் இவ்விடயம் குறித்தும்,நகைகளை கேட்டுள்ள வாலிபனிடம் நகையும் பணமும் திறுப்பி தருவதாக சொல்லி நாட்களை கடத்தியுள்ளார். இப் பெண்ணின் ஏமாற்று தனத்தை அறிந்த வாலிபன் கல்யாணம் தேவையில்லை என்று நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரிவில் பெண் மீது முறைபாட்டை ஒன்றை கடந்த 22.12.2017 பதிவுசெய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டுக்கு அமைவாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரியின் முன்னிலையில் பெண் கடந்த 30.05.2018 தினதி பணம் 80 ஆயிரமும் 12 லட்சம் ரூபாய் பெருமதியான தங்க நகையையும் திருப்பி தருவதாக ஒப்பு கொண்டு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
ஆனால் கடிதத்தில் குறித்த தினத்தில் நகையும் பணமும் திருப்பிதராத நிலையில் பொலிஸ் நிலையத்துக்கு சென்ற வாலிபரை இவ்விடயம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி அடித்தும் விரட்டியும் உள்ளார்.
பக்க சார்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு உதவிய பொலிஸ் அதிகாரி மீதும் விசாரணையை மேற்கொண்டதாலும் இவ்விடயத்தை வாலிபன் தனக்கு நேர்ந்த கதியை கடிதமூலம் ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கு கடந்த 07.6.2018 அன்று அனுப்பிவைத்துள்ளார்.
இதன் பின்னர் எதிர்வரும் (23)அன்று விசேடமாக விசாரணை ஒன்றை மேற்கொள்ள வாலிபன் கம்பளை பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸ் அத்தியஸ்தகர் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நுவரெலியா நிருபர்