சிலாபம் கொழும்பு வீதியில் மாதம்பை பகுதியில் வெள்ள நிலைமை ஏற்பட்டிருந்த போது அந்த பகுதியூடாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை செல்லவேண்டாமென பொலிஸார் அறிவித்த போதும் அதனை பொருட்படுத்தாது சென்ற நபர் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவர் மோட்டார் சைக்கிலுடன் நீரில் இழுத்துச் செல்லப்பட்ட போது அங்கிருந்தவர்களும் பொலிஸாரும் அவரை கடும் முயற்சியுடன் காப்பாற்றியுள்ளனர். ஆனபோதும் அவரின் மோட்டார் சைக்கில் காணாமல் போயுள்ளது.