பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் ; கொழும்பு வாழ் மக்களுக்கு எச்சரிக்கை!

0
56

கொழும்பில் பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமிட்டு கொள்ளையிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளமையினால் அவதானமாக செயற்படுமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஜா-அல மற்றும் ஏகல பிரதேசங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போல் நடித்து கொள்ளையிடப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளை நிறுத்திய நபர்களின் பணப்பைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடிய மூவர் மேற்கு வடக்கு குற்றப்பிரிவு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் நகைப் பொதிகள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பயாகம, கிரிபத்கொட, கந்தானை, கட்டுநாயக்க, கொள்ளுப்பிட்டி மற்றும் பாணந்துறை பிரதேசங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வீதிகளில் செல்லும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here