அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் டயகம பிரதான வீதியில் போடைஸ் என்.சி பகுதியில் கார் ஒன்று 02.03.2018 அன்று காலை 8 மணியளவில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த ஒருவர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் நான்கு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் ஒருவருக்கு மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மற்றையவர்களுக்கு பெரியளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குளியாப்பிட்டிய பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த போது இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
என்.சி பகுதியில் உள்ள பாரிய வளைவினை திருப்பும் போது மீண்டும் திருப்புவதற்கு முடியாமல் போனமையில் கார் கீழே பாய்ந்து விழுந்துள்ளமை குறிப்பிடதக்கது.
க.கிஷாந்தன்