போதைப்பொருள் பாவனை முழுநாட்டிலும் ஒரு வைரஸ்போல பரவி வருகின்றது.குறிப்பாக மலையகத்திலும் இதன் தாக்கம் அதிகமாக காணப்படுகின்றது.எனவே போதைப்பொருள் பாவனையிலிருந்து மலையகத்தை மீட்டெடுக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில் தற்போது மலையகத்தில் போதைப்பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளது.குறிப்பாக ஐஸ் போன்ற போதைப்பொருட்கள் ஒருசிலரின் ஊடாக மலையகத்துக்குள் குறிப்பாக பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விநியோகிக்கப்படுகின்றது.இவற்றை இல்லாதொழிக்க பொதுக்கள் அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும்.
போதைப்பொருட்களுடன் எவரும் நடமாடினாலோ அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் எவரும் காணப்பட்டாலோ அவர் தொடர்பில் சற்று அவதானத்துடன் இருக்க வேண்டும்.மேலும் பிள்ளைகளின் நடத்தைகள்,பழகும் நண்பர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும்.
அரசாங்கம் அதை தடுப்பதற்கு பல செசெயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது எனவே நாமும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறான போதைப்பொருட்கள் மலையகத்துக்குள் ஊடுருவினால் நம் சமூகம் மிகப்பெரிய பின்னோக்கிய பாதையில் செல்ல நேரிடும் எனவே முயுமுழுதாக மலையகயிலிருந்து போதைபொருளையும் போதை பொருட்களை கொண்டுவருவோர்களையும் விரட்டிப்போம் என மலையக தொழிலாளர் முன்னணியின் அமைப்பு செயலாளர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
நீலமேகம் பிரசாந்த்