போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

0
78

ஐந்து கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்கு வந்த உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் உகண்டாவிலிருந்து கட்டார் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளார்.

43 வயதான சந்தேகநபர் சுமார் 80 கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கியிருந்த நிலையில், உடலிலிருந்து இதுவரை 17 கொக்கெய்ன் உருண்டைகள் அகற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here