போதை பொருளுடன் சிவனொளிபாதமலை சென்ற 27 பேருக்கு 1லட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டம்!!

0
132

சிவனொளிபாதமலைக்கு போதை பொருளுடன் சென்ற சந்தேக நபர் 27 பேருக்கும் 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்படவர்களை அட்டன் மாவட்ட நீதிமன்றில் 19 ம் திகதி ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு தண்டம் விதித்தார்.

கடந்த 17 ம் திகதி கஞ்சா மற்றும் ஹொரோயின் போதை பொருளுடன் வந்த இளைஞர்கள் அட்டன் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் பொலிஸ் மோப்பநாயின் உதயுடன் கைது செய்யப்பட்டனர்.

தியகல சோதணை சாவடியில் மேற்கொள்ளபட்ட சோதணையின்போதே கைது செய்யப்பட்ட கம்பஹா.கொழும்பு.குருனாகல் பிரதேசத்தை சேர்ந்த மேற்படி இளைஞர்கள் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குற்றத்தை ஏற்றுக்கொண்ட நிலையிலே 1லட்சத்து 35 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து அட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் டி. சரவனராஜா தீர்ப்பளித்தார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here