போதை பொருள் நகரமாக மாறிவரும் ஹட்டனை மீண்டும் மாற்றியமைக்கவேண்டுமாயின் இ.தொ.காவை பலப்படுத்தவேண்டும்!!

0
176

மக்களுடைய பணத்தில் விருந்துஉபசாரம் மேற்கொள்வோர்கள் எதிர்வரும் 10ம் திகதிக்கு பிறகு காணாமல் போய்விடுவார்கள்.

தலவாகலை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஆறுமுகன் தொண்டமான் சவால்.

மலையக மக்களுடைய பணத்தில் இன்று விருந்துஉபசாரம் மேற்கொள்வோர்கள் எதிர் வரும் 10ம் திகதிக்கு பிறகு கானாமல் போய்விடுவார்கள் என இலங்கை தொழிலாளர் காஙரசின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமகன் தொண்டமான் சவால்விடுத்துள்ளார்.

28.01.2018.ஞாயிற்றுகிழமை தலவாகலை நகரசபை மைதானத்தில் இடம் பெற்ற உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பேசிய போதே இதனை தெரிவித்தார்.

இதன் போது மேலும் உறையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்ரசின் பொதுச்செயலாளர் நாங்கள் ஜனாதிபதி அவர்களோடு இனைந்து கைகோர்த்து சேவல் சின்னத்திலும் வெற்றிலை சின்னத்திலும் போட்டியிடுகின்றோம். அந்தவகையில் இம் முறை இடம் பெறுகின்ற உள்ளுராட்சி சபைதேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் நிச்சயமாக 12சபைகளையும் கைபற்றி எங்கள் ஜனாதிபதி அவர்களை மேலும் பலபடுத்த உள்ளதாக தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வாங்கி பெற்றுதருவதாக கடந்த பொதுதேர்தலின் போது பிரதம மந்திரி ரனில்விக்கரசிங்க தலவாகலை நகரசபை மைதானத்தில் வைத்து எமது மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கி விட்டு சென்றார். ஆனால் எமது மக்களுக்கு ஆயிரம் ரூபா கிடைக்கவில்லை அதேபோல் உங்களுக்கான ஒன்றரை வருடத்திற்கான நிலுவை பணம் போன்ற அனைத்திற்கும் ஜக்கிய தேசிய கட்சியோடு இனைந்த அமைச்சர்கள் ஆப்புவைத்ததாக கூறினார்.

அதேபோல் மக்களுடைய EPFபணம் அனைத்தும் இன்றும் யானையின் வயிற்றுக்குள் போய்விட்டது ஆனால் இன்று எங்கள் ஜனாதிபதி நேர்மையாகவும் நியாயமாகவும் எமது மக்களுக்கு சேவையினை செய்து வருகிறார் .

இதேவேலை இன்று எங்கள் ஜனாதிபதி அனைத்து தோட்ட நிர்வாகங்களில் உள்ள முகாமையாளர்களையும் சந்தித்தார் எனவே நாங்கள் ஜனாதிபதி அவர்களை பலபடுத்த வேண்டுமெனவும் கூறினார் .

இம்முறை இடம் பெறுகின்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் சேவலும் வெற்றிலையும் மாத்திரம்தான் வெற்றிபெறும் வேறு எந்த கட்சியும் வெற்றி கொள்ளாது தேர்தலுக்கு இன்னும் எஞ்சியிருப்பது 10 11நாட்கள் மாத்திரமே ஆகையால் தோட்டதலைவர்மார்கள் மற்றும் தலைவிமார்கள் மிகவும் அவதானத்துடன் செயல்படவேண்டும் ஏன் என்றால் தலைவர் மார்களை விருந்து உபசாரத்திற்கு வரும்படி அழைத்து சென்று சீனநாட்டு பெண்ங்களை வரவழைத்து தலைவர்மார்களுக்கு சோறு ஊட்டிவிடுதாகவும் குறிப்பிட்டார்.

ஹட்டன் பகுதியில் சிறந்த ஜலன்ஸ்கல்லூரி ஸ்ரீ பாத தேசிய கல்வியற் கல்லூரி மற்றும் மாணிக்கபிள்ளையார் போன்ற சிறந்த நகரமாக விளங்கிய அட்டன் நகரம் இன்று  போதை பொருள் நகரமாக மாறிவருகின்றது. எனவே அட்டன் நகரத்தை மீண்டும் மாற்றியமைக்க வேண்டுமானால் எதிர்வரும் 10ம் திகதி எமது மக்கள் இலங்கை தொழிலாளர் காஙரசை பலபடுத்த வேண்டுமென கேட்டுகொண்டார்.

 

எஸ் சதீஸ், தலவாக்கலை பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here