போன் வாங்குவதற்காக பாட்டியை கொலை செய்த 15 வயது பேரன்

0
26

கையடக்க தொலைபேசி வாங்குவதற்காக பணம் திரட்டும் நோக்கில் தனது பாட்டியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 15 வயது சிறுவன் பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பெலியத்த பகுதியில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு சுமார் 4 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் களவாடப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டுள்ளார். இதன்போதே தனது பாட்டியை கொலை செய்த சம்பவத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

குறித்த சிறுவனும், அவரது 70 வயது பாட்டியும் வசித்துவந்த நிலையில் பாட்டி கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். எனினும், மரண பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் அவருக்கு இறுதி கிரியைகள் நடத்தப்பட்டு, சடலம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

தனது பாட்டி அணிந்திருந்த தங்க சங்கிலியை பெறுவதற்காக, அவரின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கொலை செய்ததாக சிறுவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கையடக்க தொலைபேசியொன்றை வாங்குவதற்காகவே இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றனது. பாட்டியின் தங்க சங்கிலி, நண்பர் ஒருவரிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது. அவர் கடற்றொழிலுக்கு சென்றுள்ளார் என தெரியவருகின்றது.

குறித்த சிறுவனும், அவரது மற்றுமொரு நண்பரும் தங்காலை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.பாட்டியின் சடலம், விசாரணைகளுக்காக இன்று தோண்டி எடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here