அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போபத்தலாவ காட்டுப்பகுதியில் வயோதிபப் ஆண் ஒருவரின் சடலம் உருகுலைந்த நிலையில் எழும்புக்கூடாக 20.02.2018 அன்று மாலை 4 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு மீட்கப்பட்டவரின் சடலம் போபத்தலாவ பகுதியை சேர்ந்த ஆர்.எம்.ரம்பன்டா வயது 80 என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இரண்டு பிள்ளைகளின் தந்தையான குறித்த ஆண் தனது வீட்டிலிருந்து கடந்த வருடம் 7ம் மாதம் வெளியில் செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்களால் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்பிறகு 20.02.2018 அன்று குறித்த காட்டுப்பகுதிக்கு விறகு சேகரிப்பதற்காக சென்ற ஒருவர் கயிறில் தொங்கியவாறு எழும்புக்கூடை கண்டதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து விரைந்து சென்ற அக்கரப்பத்தனை பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துக்கொண்டுள்ளார என்பது தொடர்பாக அக்கரப்பத்தனை பொலிஸாரும், நுவரெலியா கை ரேகை அடையாளப்பிரினரும் இணைந்து புலன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளன.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அக்கரப்பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
க.கிஷாந்தன், நிருபர் மு.இராமச்சந்திரன்