அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வருகிற 13-ந்தேதி முதல் 15ந்தேதி வரை சீனாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த சந்திப்பின்போது டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஒன்பது ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க அதிபர் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
தொடர்ந்து நீடித்து வரும் அமெரிக்க-இஸ்ரேல்-ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி மீதான முற்றுகையால் ஏற்பட்ட உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, மற்றும் தைவான் உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் இந்தப் பயணம் நடைபெறுகிறது.
டிரம்பின் இந்த சுற்றுப்பயணத்தின்போது, நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அத்துடன், பொருளாதாரம் மற்றும் வர்த்தகப் பிரச்சினைகள் இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.




