போலி வாகன இலக்க தகடுடன் அதிவேக பாதையில் பயணித்த அதி நவீன வாகனத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொடகம பகுதியில் மேற்படி வாகனத்தை பின் தொடந்து சென்ற பொலிசார் நபரை கைது செய்ததுடன் வாகனத்தையும் கைப்பற்றினர்.
மேற்படி நபர் தான் பிரதமரின் அலுவலகத்தில் சேவையாற்றுபவர் என விசாரணைகளில் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளில் பதுளையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் 32 வயதுடைய அவரிடம் இருந்து மேலும் மூன்று போலி வாகன இலக்க தகடுகள் மீட்கபட்டுள்ளதாக் பொலிசார் அறிவித்துள்ளனர்.