போலி தடுப்பூசி அட்டை குறித்து சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை.!

0
133

இலங்கையர்கள் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை தவிர்க்க போலி தடுப்பூசி அட்டைகளைப் பயன்படுத்துதல் தொடர்பில் சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தடுப்பூசி போடுவதைத் தவிர்ப்பது ஒரு பயனற்ற முயற்சி என மருத்துவர் அன்வர் ஹம்தானி (Anwar Hamdani) தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி போடுவது ஒரு சமூகப் பொறுப்பாகும், எனவே அனைவரும் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட வேண்டும்,” என அவர் கூறினார்.

மேலும் தடுப்பூசி போடப்பட்ட அனைவரின் தகவல்களும் சுகாதார அமைச்சகத்திடம் உள்ளன என்று தெரிவித்தார்.

அதேவேளை, இலங்கையில், ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 5% – 10% அதிகரித்துள்ளதாக பொது சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறும் வழியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here