மகனை கடத்திய தந்தை சுட்டுக் கொலை

0
83

ஹொரணை, கந்தானையில் இருந்து 7 வயது சிறுவனை கடத்திச் சென்ற ‘நீலக’ என்றழைக்கப்படும் சிறுவனின் தந்தை ஹொரணையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இன்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டின் போது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கந்தானையில் இருந்து நேற்று புதன்கிழமை இரவு வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு சந்தேக நபரின் மாமியார் பராமரிப்பில் இருந்து தனது சொந்த மகனை கடத்திச் சென்றவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுட்டுக் கொல்லப்பட்டவர் கொலைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் ‘நீலக’ கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப தகராறு காரணமாக தனது மனைவியின் கைகளை கூரிய ஆயுதத்தால் வெட்டி காயப்படுத்திய நிலையில் இவர் தற்போது அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

இந்த நிலையில் சந்தேகநபர் சிறுவனை நேற்று கடத்திச் சென்றதை அடுத்து பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

ஹொரணை, வெல்லப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிவிரைவு மோட்டார் சைக்கிள் பிரிவினருடன் இன்று இடம்பெற்ற பரஸ்பர மோதலின் போது சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற வீட்டில் சந்தேகநபரின் மகன் இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் , அவரைக் கண்டுபிடிக்க விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here