மகன், மருமகளின் பட்டமளிப்பு விழாவுக்காக லண்டன் செல்கிறார் ஜனாதிபதி!

0
132

ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 12ஆம் திகதி தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டு லண்டன் செல்லவுள்ளார்.

தனது மகன் தஹன் சிறிசேன மற்றும் தனது வருங்கால மருமகள் ஆகியோரின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காகவே அவர் ஐந்து நாட்கள் விஜயம் மேற்கொண்டு லண்டனுக்குச் செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த விஜயம் தனிப்பட்ட ரீதியில் அமையவுள்ளதால் நிகழ்ச்சி நிரல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு எந்தவித தகவலையும் வெளியிடவில்லை.

ஆனால், இவரின் விஜயம் ஐந்து நாட்கள் கொண்டதாக அமையவுள்ளதால் தனிப்பட்ட ரீதியில் பிரிட்டனின் பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சிலரையும் அவர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

லண்டனில் இடம்பெற்ற ஊழலுக்கு எதிரான மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த மே மாதம் 11ஆம் திகதி அங்கு சென்றிருந்தார்.

இதன்போது பிரதமர் டேவிட் கமரூன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பலரை அவர் சந்தித்திருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி ஜனாதிபதியாக பொறுப்பேற்று முதல் தடவையாக பொதுநலவாய மாநாட்டில் உரையாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டனுக்குச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அமெரிக்காவின் – நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்காக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி மைத்திரிபால அங்கு செல்லவுள்ளார். அதன் பின்னர் அவர் சீனாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் சீனாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here