‘அடையாளம்’ சிவில் அமைப்பு மற்றும் ‘தாமரைக் குளம்’ பதிவர் குழு ஒன்றிணைந்து நடாத்தும் மகளிருக்கான வருடாந்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிக்கான முன்பதிவு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி கடந்த வருடம் நுவரெலியா மெராயா தமிழ் மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடம் ‘மீனாட்சி அம்மை வெற்றிக் கிண்ணம்’ என்ற பெயரில் மகளிருக்கான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியை நடத்த ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளது. அத்துடன் வரிய பிரதேச பாடசாலைகளுக்கு உதவி புரியவும் சமூக விழிப்புணர்வு திட்டங்களை முன்னெடுக்கவும் ஏற்பாட்டுக்குழு நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த முறை போட்டியில் சுமார் 12 மகளிர் அணிகள் பங்குபற்றிய நிலையில் இம்முறை அதிக அணிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. எனவே போட்டியில் பங்குபற்ற விரும்பும் மகளிர் அணிகள் விஜய் – 0715887055 அல்லது அருள் – 0713118554 அல்லது பிரபு 0767063793 இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும்.
மேலதிக வீராங்கனை உள்ளடங்களாக 8 பேர் கொண்டவர்களாக அணி அமைய வேண்டும். வயதெல்லையோ பிரிவுகளோ கிடையாது. போட்டி நடத்தப்படும் இடம், காலம், நேரம் விரைவில் அறிவிக்கப்படும். இம்மாதம் 25ம் திகதிக்கு முன்னர் பதிவுகளை மேற்கொள்ளவும்.
(க.கிஷாந்தன்)