மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலை , ஆரம்ப கல்வி இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த சில்வா

0
106

நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு உட்பட ஏழு கிராம சேவகர் பிரிவை சேர்ந்தவர்களை ஒன்றினைத்து மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பாலர் பாடசாலை , ஆரம்ப கல்வி இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த சில்வா ஏற்பாட்டில் நானுஒயா நாவலர் தமிழ் பாடசாலையில் நடமாடும் சேவை ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது

இதன் போது கூப்பன் வழங்காத முதியோர்களுக்கு கூப்பன் பதிவு செய்தல் , இறப்பு, பிறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்கள் வழங்குதல், தேசிய அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுத்தல் , பதிவு மேற்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான சேவை, பொலிஸ் முறைப்பாடுகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது

இவ் நடமாடும் சேவையில் கலந்துகொண்டவர்களுக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுப் பரவல் பற்றிய தகவல்கள், புதுவிவரங்கள் மற்றும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது .இவ் நிகழ்வில் நுவரெலியா மாவட்ட உதவி செயலாளர் ,பிரதேச செயலாளர் ஆகியோர் உட்பட அரச முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

 

டி.சந்ரு செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here