மகளுக்கு கழிவறை திரவம்: தந்தை கைது

0
39

தனது ஆறு வயது மகளுக்கு கழிவறையை துப்புரவு செய்யும் திரவத்தை (டாய்லெட் கிளீனர் திரவத்தை) வாயில் பலவந்தமாக ஊற்ற முயன்ற தந்தை கைது செய்யப்பட்டள்ளார்.

வெளிநாட்டில் உள்ள சந்தேக நபரின் மனைவி பணம் அனுப்பாததால் கோபமடைந்த கணவன், மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பயமுறுத்துவதற்காக இவ்வாறு செய்துள்ளார் என ஹங்கம பொலிஸார் தெரிவித்தார்., சந்தேக நபர் ஹுங்கம, படாட பிரதேசத்தில் வசிக்கும் தொழிலாளி ஆவார்.

பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு (119) கிடைத்த தொலைபேசி அழைப்பின் பிரகாரம், சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், சந்தேகநபர் அவ்வேளையில் அதிகளவில் குடிபோதையில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கழிவறையை துப்புரவு செய்யும் திரவம் பருகப்பட்டதா என்பதை பரிசோதிப்பதற்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் ஆறு வயது சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here