அமெரிக்காவின் வட கரோலினாவில் உள்ள பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்த அதே நாளில் லொட்டரியில் மிகப்பெரிய பரிசுத் தொகையும் விழுந்துள்ளதால் அவர் கடும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
பிரெண்டா கோம்ஸ் ஹெர்னாண்டஸ் எனும் 28 வயது பெண்ணுக்கு, நவம்பர் 9-ஆம் திகதி பெண் குழந்தை பிறந்தது.அவர் தனது மூன்றாவது குழந்தையை உலகிற்கு வரவேற்ற சில மணிநேரங்களில், பவர்பால் லொட்டரி போட்டியில் 100,000 அமரிக்க டொலர்களை வென்றார்.
தனது மகள் தான் தனக்கு அதிர்ஷ்டத்தை கொண்டு வந்ததாக உணர்வதாக பிரெண்டா கோம்ஸ் கூறினார். ஹெர்னாண்டஸ் தனது இரண்டு மகன்களின் பிறந்தநாளை எண்களை எடுக்க பயன்படுத்தியதாக கூறினார்.