மகா சிவன் ராத்திரி நோன்பு பற்றிய சிறப்புப் பார்வை…………

0
321

சைவர்களால் தனித்துவமாக அனுட்டிக்கத்தக்க சிறப்பு மிக்க, மகத்துவம் வாய்ந்த விரதம் மஹா சிவராத்திரி விரதமாகும். சோமவார விரதம், உமாமகேஸ்வர விரதம், திருவாதிரை விரதம், சிவராத்திரி விரதம், கல்யாண சுந்தரவிரதம், சூல விரதம், இடப விரதம், கேதார விரதம் எனும் சிவ விரதங்கள் எட்டினுள் (கந்தபுராணத்தின் உபதேச காண்டம் ) சிவனுக்குச் சிறப்பான விரதமாக மஹா சிவராத்திரி திகழ்கின்றது.

சிவ விரதங்கள் பல இருந்தாலும் சிறப்பான விரதமான சிவராத்திரி விரதம் சைவ சமயத்தவர்கள் முத்திப்பேறு அடைய சிறந்த விரதமாக விளங்குகிறது. சிவன் என்பதன் பொருள் மங்ளம் தருபவன் என்றும் செம்மை தருபவன் என்றும் கூறப்படும். மங்களத்தைத் தரும் சிவபிரானை நினைத்து, மனமுருகி, உணவு ஒழித்து. சிவன் நாமம் போற்றி, அவனையே பற்றி நிற்கும் புனித நாளே சிவராத்திரி ஆகும்.

சிவராத்திரி – சொற் பொருள் விளக்கம்.

இராத்திரி என்பது இருட்காலம் எனப் பொருள்படும். உண்மையான இருள் காலம் என்பது இறைவன் உலகம் முழுவதையும் ஒடுக்கி இருக்கும் காலமாகும். இதனை சர்வ சங்கார காலம் அல்லது பிரளய காலம் எனவும் ஊழிக்காலம் எனவும் பலவாகக் கூறுவர். இரவில் ஒளியின்றி உயிர்களின் நடமாட்டம் இல்லாது அமைதி நிலவுவது போல பஞ்ச பூதங்களும் தனுஇ கரணஇ புவண போகங்களும் ஒன்றுமே இல்லாது உயிர்கள் செயலற்றுக் கிடப்பதனால் அமைதி நிலவும். அந்த பேரிருளில் தனித்து நிற்பவரே சிவபெருமான் ஆவார். இதனாலேயே அது ‘சிவராத்திரி’ எனக் கொள்ளப்படுகிறது. உலக ஒடுக்க நிலையாகிய இரவு சிவனுக்கே உரியதாகும். இதனால் அந்த இரவை சிவராத்திரி என்பர். மேலும் ராத்திரி என்பதற்குப் ‘பூசித்தல்’ எனும் பொருளும் உண்டு. இதன்படி “சிவனை பூசிக்க தகுந்த இரவே “சிவராத்திரி” என பொருள்படும்.

சிவராத்திரி என்பது யாது?

மாசி அல்லது மகா மாதத்தில் அமாவாசையில் இருந்து 14 ஆவது சதுர்த்தசியன்று வருவது மகா சிவ ராத்திரியாகும். சிவ விரத நாட்களுள் தலையாயது மஹா சிவராத்திரி நாளேயாகும். சிவராத்திரி பற்றிக் கூறும் நூல்கள இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம் கந்த புராணம் பத்ம புராணம் அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவராத்திரியின் மகிமை மகா சிவராத்திரியின் மேன்மையை ஆகமங்கள் சிவமகா புராணம் ஸ்காந்தம் பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகா சிவராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் மகா சிவராத்திரி கற்பம்(மறைஞான சம்பந்தர்), சிவராத்திரி

புராணம்(வரதராச கவிராசர்) என்பனவும் மகா சிவராத்திரி விரதம் பற்றிக் கூறுகின்றமை குறிப்பிடற்பாலது.

விரதம் பற்றிய ஐதீகங்கள்

ஆதிகாலத்தில் ஒரு நாள் சிவனின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின. தேவர்கள் பயமுற்று இறைவனைத் துதிக்கஇ மீள ஒளி தோன்றிற்று. அந்த நாளே சிவராத்திரி என்பர்.

சிவராத்திரி விரதத்தின் மகிமையை சிவன் உமாதேவிக்கும் திருநந்திதேவருக்கும் உபதேசிக்கஇ திருநந்தி தேவர் தேவர்களுக்கும் சூதபுராணிகருக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்ததாகப் புராணங்கள் மொழிகின்றன. புராணங்களில் சிவபெருமானின் திருவிளையாடல்கள் பலவாறு சொல்லப்பட்டுள்ளது. அவற்றின் படிஇ ஆதிகாலத்தில் ஒரு நாள் சிவனின் கண்களை பார்வதிதேவி விளையாட்டாக மூடியதால் ஈரேழு உலகங்களும் இருளில் மூழ்கின. தேவர்கள் பயமுற்று இறைவனைத் துதிக்க மீள ஒளி தோன்றிற்று. அந்த நாளே சிவராத்திரி என்பர்.

தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற திருப்பாற் கடலைக் கடைந்த போது
மகா பிரளயத்தின் பின் படைக்கப்பட்ட உயிர்கள் மோட்சகதி அடைய வேண்டி பார்வதி சிவனைப் பூசித்த தினமே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.

மற்றுமொரு கதையின் படி தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற திருப்பாற் கடலைக் கடைந்த போது எழுந்த ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான்இ ‘திருநீலகண்டர்’ ஆக அருள் புரிந்தார். அவ்வாறு அருள் புரிந்த அந்நாளே சிவராத்தரி எனக் கூறுவர். மகா பிரளயத்தின் பின் படைக்கப்பட்ட உயிர்கள் மோட்சகதி அடைய வேண்டி பார்வதி சிவனைப் பூசித்த தினமே சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது. மார்க்கண்டேயன் உயிரை காக்க சிவன் எமனைக் காலால் உதைத்தார். அதன்பின் எமனை உயிர்ப்பிக்க தேவர்கள் வேண்டினர். அந்த நாளை சிவராத்திரி என்றும் கூறப்படுகிறது.

ஆதியும்இ அந்தமும் இல்லா அரும் பெரும் ஜோதி

கந்த புராண தக்ச காண்டத்தில் அடிமுடி தேடிய படலத்தில் மஹா சிவராத்திரி நன்கு விளக்கப்படுகிறது. கந்தபுராணத்தின் படிஇ அடிமுடி காணமுடியாமல் நின்ற திருமாலுக்கும் பிரம்மாவுக்கும் லிங்கோற்பவ மூர்த்தியாக சிவன் காட்சி தந்த தினம் சிவராத்திரி எனக் கருதப்படுகிறது. படைத்தற் கடவுளான பிரமதேவனுக்கும் காத்தற் கடவுளான விஸ்ணு மூர்த்திக்கும் இடையே யார் பெரியவர்? (நானே பிரமம்) எனும் வாதம் ஏற்பட்டது. னை நிறுத்தும் பொருட்டு தானே பிரமம் என்பதை ஆன்மாக்கள் அறிந்து உய்யும் பொருட்டு பரமசிவன் திருவுளம் இரங்கி மாசி மாதத்து கிருஷ்ண பட்ஸ சதுர்த்தசி திதியும் சோம வாரமும் திருவோண நட்ச்சத்திரமும் கூடிய புண்ணிய தினத்தில் இரவு பதின்நான்கு நாளிகை அளவில் சோதி வடிவமாக தோன்றினார். அப்பொழுது உங்கள் வலிமையை காண இந்த சோதியின் அடியையும் முடியையும் காணுங்கள் என்று ஒரு அசரீரி கேட்டது .பிரம்மா விஸ்ணு இருவரும் அதனை கேட்டனர் .பிரம்மா அன்னப்பட்சி வடிவமாக சோதியின் முடியையும் விஷ்ணு பன்றியாக அடியையும் காண சென்றனர் . நீண்டகாலம் சென்றது அவர்களால் எதையும் காண முடியவில்லை .உடலும் உள்ளமும் களைப்படைந்து சோர்ந்து மீண்டனர். அந்த வேளை சிவபெருமான் அந்த சோதியின் நடுவே சிவலிங்க வடிவமாக தோன்றிஇ பின்னர் அந்த இலிங்கத்தில் இருந்து நீல கண்டமும் முக்கண்ணும்இ மான், மழு, அபயம், வரதம் பொருந்திய கரங்களும் கொண்டு வெளிப்பட்டுக் காட்சி கொடுத்தருளினார் . அந்த இலிங்கத்தில் இடப்பக்கத்தில் நின்று விஷ்ணுவும் வலப்பக்கத்தில் நின்று பிரம்ம தேவரும் தரிசித்தனர். மற்றைய தேவர்களும் அந்த வடிவத்தைக் கண்டு வணங்கி நிற்கஇ பரமசிவன் ஒரு முகூர்த்த காலம் தரிசனம் தந்துஇ மீண்டும் அந்த சோதியில் மறைந்தருளினார் . சிவன் அந்த சோதியின் நடுவ லிங்கோற்பவராகத் தோன்றிய இரவு சிவராத்திரி என பெயர் பெற்றது. திருமுறைப்பாடல்களும் கந்தபுராணம் கூறும் செய்தியையே தருகின்றன.

சிவராத்திரி விரதங்கள்

சிவராத்திரியானதுஇ நித்ய சிவராத்திரிஇ மாத சிவராத்திரிஇ பட்ச சிவாராத்திரிஇ யோக சிவராத்திரி என ஐவகைப்படும். அவற்றுள் மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மாசி மாத மஹா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. இது வருஷ சிவராத்திரி என்றும் அழைக்கபடுகின்றது.

நித்ய சிவராத்திரி : பன்னிரண்டு மாதங்களில் வரும் தேய்பிறைஇ வளர்பிறை சதுர்த்தசி நாட்கள் (வருடத்தில் 24 தடவை) அனைத்தும் நித்ய சிவராத்திரி.

பட்ச சிவராத்திரி : தை மாதத்தில் கிருஷ்ண பட்ச தேய்பிறை பிரதமை முதல் 13 நாட்களுக்குத் தொடர்ந்து விரதம் அனுட்டானங்களுடன் சிவபூஜை செய்வது பட்ச சிவராத்திரி.

மாத சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தசிஇ பங்குனி மாதம் முதல் திருதியைஇ சித்திரை மாத முதல் அஷ்டகம்இ வைகாசி முதல் அட்டமிஇ ஆனி சுக்கில அட்டமிஇ புரட்டாதி முதல் திரயோதசிஇ ஐப்பசி சுக்கில துவாதசிஇ கார்த்திகை முதல் சப்தமிஇ மார்கழி இரு பட்ச சதுர்த்தசிஇ தை சுக்கில திருதியை ஆகிய 12 மாதங்களும் கொண்டாடும் விரதங்கள் மாத சிவராத்திரி நாட்கள்.

யோக சிவராத்திரி : சோம வாரம் (திங்கட்கிழமை) அமாவாசை அறுபது நாழிகை இருக்கும் தினம் யோக சிவராத்திரி. மகா சிவராத்திரி : மாசி மாத கிருஷ்ண பட்ச (தேய்பிறை) சதுர்த்தசி தினமன்று வரும் ராத்திரியே மஹா சிவராத்திரியாகும்.

வழிபடும் நியமங்கள்

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம். சிவன் மீது உண்மை உள்ளன்பு பூண்டொழுகும் எவரும் சிவராத்திரி விரதம் இருந்து பலன் பெறலாம். விரதமாவதுஇ “மனம் பொறிவழி போகாது நிற்றற்பொருட்டு உணவை விடுத்தேனும் சுருக்கியேனும் மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலுங் கடவுளை விதிப்படி மெய்யன்போடு விசேடமாக வழிபடதல்” என்கிறார் சுவாமி ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாவலர். இதற்கேற்பஇ சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும்.

சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டுச் சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்துஇ நண்பகலில் குளித்துஇ மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்துஇ வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன் பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும்.

கோணேச்சரம் – இந்த ஆலயத்தில் சிவராத்திரி தினம் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது

கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம். சிவ ருத்ர பசுபதி நீலகண்டா மகேஸ்வரா ஹரிகேசா விருபாக்ஷா சாம்பு சூலினா உக்ராபீமா மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

அன்றைய தினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து மறுநாள் விடியற்காலையில் நீராடிஇ காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து

விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர் ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர் பால் பழங்களை உண்ணலாம். பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும் சிவத்துதிகளைச் சொல்லியும் சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்துஇ அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.

சிவ ராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம் பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும் வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது திண்ணம். தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இக்காலத்தில் சிவ சிந்தனையே இல்லாமல் கண் விழித்தால் மாத்திரம் போதும் என்று நினைத்துக் கொண்டுஇ ஆடம்பர விழாவிலும் களியாட்டத்திலும் ஈடுபட்டு சூதாட்டம்இ சினிமா பார்த்தல் போன்றவற்றில் கவனத்தைச் செலுத்தி விழித்திருப்பதில் எவ்விதப் பலனும் கிட்டாது என்பதை உணரவேண்டும்.

வழிபாட்டுப் பேறு

இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதிஇ வாழ்க்கையில் முன்னேற்றம்இ தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும். முறைப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள். சிவராத்திரி அன்று நியம முறைப்படி விரதம் அனுட்டித்தால் வாக்குபலிதமும் மந்திர சித்தியும் கூடிவரும் என்பது சித்தர்கள் வாக்கு. சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன் தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். கௌதமர். வசிட்டர்இ அகஸ்தியர் போன்ற சப்தரிஷிகளும்இ சூரியன்இ சந்திரன்இ அக்கினிஇ குபேரன்இ மன்மதன்இ விஷ்ணுஇ பிரம்மா ஆகியோரும் சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றதாகக் கூறப்படுகிறன்றது.

சிவராத்திரி விரத பலன் கூறும் கதை

இந்த சிவராத்திரியின் சிறப்பினை சிவபெருமானே விஷ்ணு பகவானுக்குக் கூறியதாக புராண வரலாறு கூறுகிறது. சிவராத்திரி விரத மகிமை குறித்துப் பல கதைகள் உள்ளன. அவற்றிலொரு சுவாரசியமான கதையைக் காண்போமா?. மகாசிவராத்திரி தினத்தில் வியாதன் என்ற வேடன் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான். சிவராத்திரியைப் பற்றி அவனுக்குத் தெரியாது. நாள் முழுவதும் அலைந்தும்ஒரு மிருகமும் அவனுக்குக் கிடைக்கவில்லை. பசி ஒரு புறம்இ களைப்பும் மேலிட்டது.இரவுப் பொழுதும் வந்துவிட்டது. இரவுப் பொழுது என்பதால் வன விலங்குகளுக்கு அஞ்சி ஒரு மரத்தின் மீது ஏறி இருந்தான். தூக்கம் கண்களைக் கட்டியது. ஆதலால் மரத்தில் இருந்து விழுந்து விடுவோம் என நினைத்துஇ தூக்கம் கொள்ளாது இருக்கஇ மரத்தில் இருந்த இலைகளை ஒவ்வொன்றாகப் பிடுங்கிக் கீழே போட்டான். இதனால் வேடன் துயில் செய்யாது இருந்தான். இவ்வாறு விடியும்வரை உணவும் இன்றி கண்விழித்திருந்து இலையை ஒவ்வொன்றாகப் பிடுங்கி கீழே போட்டுக் கொண்டிருந்தான். வேடன் இருந்த மரம் வில்வ மரம். அதன் கீழே ஒரு சிவலிங்கம் இருந்தது. அறியாமலே வேடன் பிடுங்கி எறிந்த வில்வ இலைகள் சிவலிங்கத்தின் மீதே விழுந்தன. வேடன்இ விடிந்ததும் மரத்தில் இருந்து இறங்கிஇ வீடு சென்று சைவ உணவு உண்டான். வேடன் தன்னை அறியாமலேயே சிவராத்திரி தினத்தன்றுஇ உணவும் உறக்கமும் இன்றிஇ சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் பூசித்ததால் சிவன் அருள் கிட்டியது. சிவலோகப் பிராப்தம் கிட்டியது.

வியாதன் என்ற வேடன் பூஜித்த லிங்கம் ‘வியாதேஸ்வரர்’ என்று பெயர் பெற்றதாக வரலாறு கூறுகிறது. மற்றுமொரு கதையின் வழிஇ மதுரை மாநகரில் சம்பகன் என்றொரு திருடன் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு ஒரு கோயிலில் புகுந்து கொள்ளையடித்தான். கோயில் காவலர்களால் மற்றவர்கள் பிடிபடஇ சம்பகன் மட்டும் விலையுயர்ந்த சில ஆபரணங்களோடு தப்பியோடி விட்டான். பின்னர்இ மாறுவேடம் பூண்டு சப்தஸ்தான தலங்களுள் ஒன்றான திருச்சோற்றுத்துறையில் இருந்த சிவத்தலத்தை அடைந்துஇ பதுங்கிக் கொண்டான். அன்று மாசி மகா சிவராத்திரி. ஆலயத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடந்து கொண்டிருந்தன. கோயிலுக்குள் பதுங்கியிருந்த சம்பகன் அங்கே திருடவும் முடியாமல்இ உணவு உறக்கம் எதுவுமில்லாமல் அன்றிரவு முழுவதும் கண் விழித்திருந்தான். மக்கள் அனைவரும் இறைவனைத் துதித்து மகிழ்ந்தனர். விடியற்காலையில் கோயிலை விட்டு வெளியேறி காவிரி நதியில் நீராடினான். அன்று மதியம் பிச்சையேற்று உண்டான். அன்று முழுவதும் திருட்டு எதுவும் செய்யாமல் இருந்தான். காலப்போக்கில் உயிர் துறந்தான்.

அவ்வாறு இறந்த அவன் உயிரை எமதூதர்கள் எமதர்மராஜனின் அவைக்கு இழுத்துச் சென்றனர். எமதர்மன் தன் அமைச்சரான சித்ரகுப்தரை நோக்கிஇ சம்பகனின் வரலாறுப் பற்றிகேட்க அவரும் அவன் செய்த பாவங்கள் அனைத்தையும் கூறி விட்டுக் கடைசியில்இ பிரபு இவன் கடைசிக் காலத்தில் மகா சிவராத்திரியன்று சிவாலயத்தில் உணவும் உறக்கமும் இன்றி உபவாசம் இருந்து சிவபெருமானை தரிசித்தான். மறுநாள் காவிரியில் நீராடினான். பின்னர் பிச்சை எடுத்து உண்டான். இவ்வகையில் மகாசிவராத்திரி விரதம் அனுஷ்டித்திருக்கிறான் என்று சித்ரகுப்தன் சொல்லி முடிக்கும் முன்னரே சிவகணங்கள் விரைந்து வந்து சம்பகனை சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். சம்பகன்இ அவனையுமறியாமல் சிவராத்திரி விரதம் மேற்கொண்டதால் செய்த பாவங்கள் நீங்கி முக்தி பெற்றான். இத்தகு மகிமை பொருந்திய சிவராத்திரி விரதமிருந்து நாமும் முக்திப் பேற்றினை அடைவோமாக.

“நேர்த்தியாக விரதமிருந்து எம்பெருமான் ஈசனின் அருள் பெற்று பேரின்பப் பேறு பெற்றேகுவோமாக”

“தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here