மகிந்தவின் கரங்களை பலப்படுத்த அழைக்கிறார் ரிஷி செந்தில்ராஜ்!

0
138

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கரங்களைப் பலப்படுத்துமாறு மலையக தேசிய முன்னணியின் தலைவரும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் தமிழ்ப்பிரிவு பொறுப்பாளருமான கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலர்மொட்டு சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அமோக வெற்றியீட்டும் என்பதில் எவ்வித ஐயமும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளர் அறிமுகம் கொழும்பு சுகததாச அரங்கில் நேற்றைய தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்வு தொடர்பில் ஊடக அறிக்கை ஒன்றின் மூலம், கலாநிதி ரிஷி செந்திராஜ் ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலையக தேசிய முன்னணி நுவரெலியா மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான விரிவான அரசியல் கூட்டணி ஒன்றுடன் இணைந்து வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.
மலையக தேசிய முன்னணி தூய மக்கள் சேவையின் அடிப்படையில் வேட்பாளர்களை தெரிந்து தேர்தலில் போட்டியிடச் செய்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சி அமோக வெற்றியீட்டும்.

DSC_0024.JPG.resized

நுவரெலியா உள்ளிட்ட மாவட்டங்களில் மலையக தேசிய முன்னணி எவரும் எதிர்பார்க்காத அளவிற்கு வாக்குகளைப் பெற்றுக்கொண்டு எதிர்த்தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

தற்போதைய அரசாங்கத்தின் மிக மோசமான நிர்வாகத்திற்கு எதிராக குரல் கொடுக்க முழு அளவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

DSC_0430.JPG.resized
இம்முறை உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலையக தேசிய முன்னணி வரலாற்று சாதனை படைப்பதனை எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டு எதிர்க்கட்சியின் பங்காளிக் கட்சிகளும் ஏனைய பல அரசியல் கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி விரிவான ஓர் கூட்டமைப்பாக இணைந்து போட்டியிட உள்ளது.

DSC_0043.JPG.resized

இது தொடர்பிலான உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளோம்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு எவ்வித நலன்களையோ அபிவிருத்தித் திட்டங்களையோ முன்னெடுக்கவில்லை என்பதனை மக்கள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு விடிவினை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் தமது கட்சி எல்லா நொடிகளிலும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றது என கலாநிதி ரிஷி செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here