தலவாக்கலையில் மரக்கிளை வெடி அகற்றிய நேரத்தில் ஆசிரியர் வே.மகேஸ்வரனின் உயிரிழப்பு தொடர்பில் பல தரப்புகளிலும் சம்பந்தவட்டவர்களை கைது செய்யக்கோரியும் உயிழிப்புக்கு நீதிக்கோரியும் அழுந்தங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது.இந்நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கீழ் தலவாக்கலை -லிந்துலை நகரசபையில் கலந்துரையாடலொன்று 23/02/2022 இடம்பெற்றது.
இதன்போது மரக்கிளையை வெட்டி அகற்றப்பட்டவர்கள் நகரசபையிடத்தே எவ்வித அறிவித்தல்களும் கொடுக்கப்படாமலே மரக்கிளையை வெட்டியதாக நகரசபை தலைவர் இரா.பாரதிதாஸன் குறிப்பிட பிரதேச செயலகத்திடமும் முறையான அறிவித்தல்களும் வழங்கப்படவில்லையென கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் உயிரிழந்த ஆசிரியர் வே.மகேஸ்வரனின் உயிரிழப்புக்கு அசமந்த போக்கில் காணப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அதேபோல மரக்கிளையை பாதுகாப்பு இல்லாமல் வெட்டிய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானூடாக முன்வைக்கப்பட்டது.
மேலும் விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டதோடு உயிரிழந்த ஆசிரியர் வே.மகேஸ்வரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியதோடு குடும்பத்துக்கு நஸ்ட ஈடு பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.
நீலமேகம் பிரசாந்த், க.கிஷாந்தன்