மக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும்- ஆறுமுகன் தொண்டமான் புத்தாண்டு வாழ்த்துச்செய்தி!!

0
165

மக்களின் உள்ளங்களில் சமாதானமும் இல்லங்களில் மகிழ்ச்சியும் மலரட்டும்

இலங்கை தேசத்து மக்களின் இல்லங்கள் தோறம் மகிழ்ச்சியும் உள்ளங்கள் தோறும் நிம்மதியம் நிலைபெறும் ஆண்டாக இப்புதுவருடம் அமைவதோடு சமாதானத்திற்காக ஏங்கித் தவிக்கும் அத்தனை உள்ளங்களும் சந்தோஷமடைந்து இலங்கை மனந் திருப்தி கொள்ளும் இனிய வரத்தை இந்த சித்திரைப் புத்தாண்டு தந்தருளட்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொதுச் செயலாளரும்  நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தனது சித்திரைப் புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் தனது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது:

எமது மலையக மக்கள் இடர்களை எதிர்கொள்ளும் போதும் சவால்களை சந்திக்கின்ற போதும் அரணாகக் காத்து நின்று துயர்களையும்ரூபவ் துடைத்து பாதுகாத்து வந்திருக்கின்றோம். இந்த வரலாற்றுப் பணியை நாம் மேற்கொண்டிருப்பதை வரலாறு சான்றுபடுத்தும். இதன் காரணமாகவ தெளிந்த சிந்தனையோடும்ரூபவ் கொள்கைப்பற்றோடும் மக்கள் அனைவருக்கும் சலுகைகள்
உரிமைகள் வசதி வாய்ப்புக்கள் அத்தனையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் சாணக்கியத்தாலும் போராட்டங்களாலும் பெறப்பட்டவை என்பதை எவரும் மறந்துவிட முடியாது.

பிறக்கின்ற ஒவ்வொரு புத்தாண்டும் மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் தரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்குள்ளும் உண்டு. மலையக சமூகத்தின் மாற்றத்திற்காகவும் ஏற்றத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்திருக்கும் இ.தொ.கா எத்துணை சவால்களை எதிர்கொண்டாலும் இடைவிடாது உயரும் என்பதை இப்புத்தாண்டில் தெரிவித்துக் கொள்ள
விரும்புகின்றேன்.

2018ஆம் ஆண்டு நம்பிக்கை வலுவூட்டும் ஆண்டாகவும் மலையக மக்களின் தேவைகளிலும் அவர்களது முயற்சிகளிலும் நாம் கைகொடுப்போம் புதிய ஆண்டில் மலையகமெங்கும் மகிழ்ச்சி பரவட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

எஸ்.தேவதாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here