மக்களின் நலன் கருதி தலவாக்கலை வர்த்தகர்கள் செயற்பட வேண்டும்! ; பொது மக்கள் விசனம்

0
115

அரசாங்கத்தினால் கடந்த வாரம் 16 அத்தியவசிய பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட்டன.

நாட்டு மக்களின் நலன் கருதியே அரசினால் இக்கட்டுப்பாட்டு விலைகள் அமுல்படுத்தப்பப்டன.

இருப்பினும் தலவாக்கலை நகரிலுள்ள 95% மான வர்த்தக நிலையங்களில் இன்று குறித்த பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் அமுலாக்கப்படவில்லையென குற்றஞ் சாட்டப்படுகிறது.

1 kg சீனி ரூ. 120
1 kg பருப்பு ரூ. 180
1 kg மா ரூ. 95

இவ்வாறே ஏனைய பொருட்களும் பழைய விலைகளுக்கே விற்கப்பட்டு வருகின்றன.

தம்மிடம் இருப்பிலுள்ள பொருட்கள் முடியும் வரை புதிய விலைகள் அமுல்படுத்தப்பட மாட்டாது என வியாபாரிகள் கூறி வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மேலும் தல வர்க்கலை நகரிலுள்ள பெரும்பாலான ஒர்த்தக நிலையங்களில் தரமான பொருட்களுக்கு தரம் குறைந்த பொருட்களே விற்கப்படுவதாக தெரிய வருகிறது.

அத்தோடு இங்கு காணப்படும் உணவகங்களும் மிகவும் மோசமாகவே இருக்குன்றன. அவற்றின் சமையலறைகள் அசுத்தமாக காணப்படுகிறது. இவற்றின் நிலை எவ் அதிகாரிகளும் எவ்வித நடவடிக்கைகளும் எடுத்தாக தெரியவில்லை.

தலவாக்கலை நகர உணவகங்களில் உணவு உட்கொண்டாலோ அல்லது ஏனைய வர்த்தக நிலையங்களிலுள்ள தரம் குறைந்த பொருட்களை கொள்வனவு செய்து பயன்படுத்தினாலோ மக்கள் நோயாளிகளாவது உறுதி.

அத்தோடு தலவாக்கலையில் மரக்கறிகளும் அதிக விலைக்கே விற்கப்படுகின்றன.

கொட்டக்கலை, அட்டன், நுவரெலியா, நாவலப்பிட்டி போன்ற நகரங்களுடன் ஒப்பிடும் போது இங்கு மரக்கறிகளின் விலைகள் கூடிய விலைக்கே விற்கப்படுகின்றன.

எனவே தலவாக்கலை நகரிலுள்ள உணவகங்களை திடீர் சோதனைகளுக்கு அடிக்கடி உட்படுத்த பொது சுகாதார பரிசோதகர் உட்பட சுகாதார அதிகாரிகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் தரமான பொருட்களை விற்பனை செய்வதற்கும், கட்டுப்பாட்டு விலைகளுக்கே பொருட்களை விற்பனை செய்வதற்கு வியாபாரிகளுக்கு உத்தரவு பிரமிக்க உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கோரப்படுகிறது.

சுஜீவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here