மக்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கவும் இன்பம் தங்கவும் மலர்ந்துள்ள தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை வரவேற்று சிறப்புடன் கொண்டாடுவோம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சருமான பி. திகாம்பரம் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தமது செய்தியில்,
இலையுதிர் காலம் நீங்கி மரம் செடி கொடிகள் அனைத்தும் செழித்து வளர்ந்து பூத்துக் குலுங்கும் வசந்த காலம் மலர்ந்துள்ள வேளையில் புத்தாண்டும் பிறந்துள்ளது. அதேபோல், மக்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, வசந்தம் பொங்க வேண்டும். குறிப்பாக மலையக மக்களுக்கு பிறந்துள்ள புத்தாண்டு அவர்களின் வாழ்வு செழிக்கவும் வறுமை நீங்கி வசதிகள் பெருகவும் இனிதாக அமைய வேண்டும்.
மலர்ந்துள்ள புத்தாண்டில் மலையக மக்களுக்கான தனி வீட்டுத் திட்டத்தை தலா அஎஉ பேர்ச் காணியில் மேலும் முனைப்புடன் மேற்கொள்ள திடசங்கற்பம் பூண்டுள்ளோம். மக்களின் அடிப்படைத் தேவையான சுத்தமான குடிநீர் வசதியைப் பெற்றுக் கொடுக்க பாரிய திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிள்ளைகளின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் சிறுவர் அபிவிருத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
எனவே, மக்கள் தமது கருத்து வேற்றுமைகளை மறந்து சமூக ரீதியில் வர்க்க உணர்வோடு ஒன்றுபட்டு இருந்தால்தான் தேவையான வசதிகளைப் பெற்றுக் கொண்டு வளமாக வாழ்ந்திட வழி பிறக்கும். அந்த அந்த வகையில் அரசியல், தொழிற்சங்க பேதங்களை மறந்து “ஒற்றுமையே பலம்” என்பதை உணர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். எமது மக்கள் சீரும் சிறப்புடன் வாழவும், செல்வம் பெருகி இன்பம் காணவும் இனிதான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Home பிரதான செய்திகள் மக்களின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க சித்திரைப் புத்தாண்டை வரவேற்போம்; அமைச்சர் பி. திகாம்பரம்!