மக்களுக்கும் சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் எந்த திட்டத்தையும் முழுமையாக எதிர்ப்போம் -கன்னியுரையில் உறுப்பினர் மு.இராமச்சந்திரன்!!

0
124
நோட்டன்  பிரிட்ஜ்  நிருபர்  மு.இராமச்சந்திரன்
எதிர்கட்சி என்றால் எதிர்க்கும் கட்சி என எல்லோராலும் கூறப்படுகின்றது  அந்த சிந்தனையை  நோர்வூட் பிரதேச சபையினூடாக இல்லாதொழிப்போம் என்பதோடு மக்களிள் நல்ன் சராத விடயங்களுக்கும் சூழலுக்கு தீங்கிழைக்கும் திட்டங்களுக்கும் முழுமையான எதிர்பினை தெரிவிப்போம் என நோர்வூட் பிரதேச சபையின் உறுப்பினர் மு.இராமச்சந்திரன் தெரிவித்தார்
நோர்வூட் பிரதேச சபையின்  2018 ம் ஆண்டுக்கான முதலாது  கன்னியமர்வு புளியாவத்தை கலாசார மண்டபத்தில் 10.09.2018 காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது
சயையின் தவிசாளர் தட்சனாமூர்த்தி தங்காஜ்  கிசோகுமார் தலைமையில் இடம்பெற்ற கன்னியமர்வில் தொடர்ந்து அவர் உறையாற்றுகையில்

அவைக்கு தலைமை தாங்கும் தவிசாளர் அவர்களே 

உங்களுக்கும், ‘நோர்வூட் பிரதேச சபை’ என்ற இந்த புதிய சபைக்குத் தெரிவாகியிருக்கும் உறுப்பினர்களுக்கும், சகல மதங்களின் தெய்வங்களையும் பிரார்த்திக்கொண்டு, முதற்கண் வாழ்த்துக்களைத் தெரிவித்துகொள்கின்றேன்
நோர்வூட்
 பிரதேச சபையென்ற ஒன்று உருவாக்கப்பட்டிருக்காவிடின், நாமெல்லாம் இங்கு இந்நன்நாளில் ஒன்றுகூடியிருக்க முடியாது.
இந்த நன்நாளுக்காக உழைத்த, நான் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் தலைவரும் அமைச்சருமான பி.திகாம்பரம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் உள்ளிட்ட கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள், ஏனைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
தவிசாளர் அவர்களே!,  
‘அரசியல் என்பது சாக்கடை’ என்றுதான் தவறான அர்த்தம் கற்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறல்ல. அது ‘பூக்கடை’ என்பதை நாமெல்லாம் ஒன்றிணைந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நோர்வூட் பிரதேச சபையின் ஊடாக நிரூபிக்கவேண்டும்.
அதற்காக முதல் அமர்விலேயே சகல பேதங்களையும் மறந்து உறுதிபூண்டுகொள்வோம்.
நமது நாட்டை பொறுத்தவரையில், பல சபைகளின் செயற்பாடுகள் கறைபடிந்தவையாகவே இருக்கின்றன.
 இன்னும் சில சபைகள் முதல் அமர்வுக்கு முன்னதாகவே கறைபடிந்துவிட்டன. இதுவெல்லாம் எமக்கு ஒரு சாபக்கேடாகும் என்பதை நினைவுப்படுத்த விரும்புகின்றேன்.
இங்கிருக்கின்ற உறுப்பினர்களாகிய நாம் ஒவ்வொரும் தூய்மையான ஆடைகளையே இன்று உடுத்தியிருக்கின்றோம். அந்தத் தூய்மை எங்களுடைய மனங்களிலும் எந்நாளும் இருக்கவேண்டும்.
இங்கிருக்கின்ற 21 பேரில், 6 உறுப்பினர்களாக சகோதரிகளும் இருக்கின்றனர். அது, இந்தச் சபையையின் எதிர்கால நடவடிக்கைகளை இன்னுமின்னும் பலப்படுத்தும் என நினைக்கின்றேன்.
தவிசாளர் அவர்களே!
பல கட்சிகள், சுயேட்சை குழுக்களின் ஊடாக நாங்கள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். ஏதோ ஒருவகையில், சேவை செய்யவேண்டுமென நோக்கம் எம்மிடத்தில் உள்ளது.
அந்தச் சேவைகள் யாவும் மக்களை சென்றடையவேண்டும் என்பதே, என்னுடையதும் எங்கள் தரப்பைச் சேர்ந்தவர்களதும், என்னுடைய தலைவரதும், கட்சியினதும் பெரும் எதிர்பார்ப்பாகும்.
தவிசாளர் அவர்களே!,
 புதிய சபைக்கு, புதுமுகங்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள எமக்கு, பிரதே சபைகளுக்கு கீழான சட்டத்திட்டங்கள், நடைமுறைகள், வரையறைகள் உள்ளிட்ட இன்னும் பல விடயங்களில் போதிய அனுபவம் இல்லை.
அவற்றைக் கற்றுக்கொள்ளவேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தவிசாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஏற்படுத்தி கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள் இருக்கின்றது.
அதனூடாகவே மக்களுக்கு போதியளவான சேவையை எம்மால் செய்யமுடியும். இல்லையேல், வாக்களித்த வழியனுப்பி வைத்திருக்கும் வாக்காளர்களுக்கும், மக்கள் பிரதிகளான எங்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுவிட்டும்.
அந்த விரிசல், எதிர்க்கட்சியினராகிய எங்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும், உங்களுடைய கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கும் அடுத்தடுத்த தேர்தல்களில் ஒரு பாடமாக அமைந்துவிடும்.
இலங்கையில் ஆட்சியில், அவ்வாறான பாடங்களை பெரும் கட்சிகளே கற்றுக்கொண்டுள்ளன அல்லது வாக்காளர்கள் கற்றுக்கொடுத்துள்ளனர் என்பதை கடந்த பல தேர்தல்களில் நேரடியாகவே கண்டிருக்கின்றோம்.
‘எதிர்க்கட்சி’ என்றால் ‘எதிர்க்கும் கட்சி’ என்ற சிந்தனையே எல்லோரிடத்திலும் உள்ளது. அந்த சிந்தனைக்கு இந்தச் சபையின் ஊடாக முற்றுப்புள்ளி வைத்து ஏனைய சகல சபைகளுக்கும் முன்னுதாரமாக திகழவேண்டும் என்பதே என்னுடைய அவாவாகும்.
தவிசாளர் அவர்களே!,
எங்களிடத்தில் மாற்று எண்ணங்கள், சிந்தனைகள், கோட்பாடுகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் புரம் தள்ளிவைத்துவிட்டு, புதிய சபையின் ஊடாக, சேவை செய்யவேண்டும் என்பதே, எதிர்க்கட்சியினராகிய எங்களுடைய அவாவாகும்.
ஆனால், பொதுமக்களுக்கும், சுற்றாடலுக்கும்,  தீங்கிழைக்கும், பாதகமான எந்தவொரு செயற்பாடுகளுக்கும், சட்டத்திட்டங்களுக்கு முரணான திட்டங்களுக்கும் எங்களுடைய ஆதரவு ஒருபோதுமே கிடைக்காதென்பதை, முதல் அமர்விலேயே ஆணித்தனமாகக் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன்.
மக்களின் பிரதிநிதிகளாகிய நாங்கள், முன்மாதிரியாக திகழவேண்டும். அதற்காக ஒவ்வொரும் தங்களை அர்ப்பணிக்கவேண்டும், சட்டங்களுக்கு அப்பால் செல்லக்கூடாது. சட்டத்தை ‘ஒரு பாதுகாப்பு கோடாக’ நாமெல்லோரும் பின்பற்றவேண்டும்.
மக்கள் பிரதிநிதியென்றால், எதிர்ப்பவர்கள், சண்டையிடுபவர்கள், குழப்பக்காரர்கள், கொள்ளைக்காரர்கள், மக்களின் வரிப்பணத்தை சுரண்டி சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பவர்கள் என்ற சிந்தனை பலரிடத்திலும் உள்ளது.
20180410_101157
அவ்வாறான கெட்ட சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்கவேண்டும். இந்தச் சபையின் உறுப்பினர்களாகிய எங்களுடைய செயற்பாடுகளில் ஊடாக, அந்தக் கெட்ட சிந்தனையை இல்லாதொழிக்கவேண்டும்.
புதிய சபையின் உறுப்பினர்களாகிய எங்களுக்கு, போதியளவான நிதியொதுக்கீடுகள் கிடைக்காமல் போகலாம். ஆதலால்,  நாங்கள்தான் வருமானத்தை திரட்டவேண்டும். அதற்கான திட்டங்கள் எங்களிடத்தில் நிறையவே உள்ளன. அதனையும் தவிசாளர், எதிர்காலத்தில் உள்வாங்கிகொள்வார் என நம்புகின்றோம்.
தவிசாளர் அவர்களே!, 
வருமானம் திரட்டுகின்றோம் எனக் கூறிக்கொண்டு,  வர்த்தகர்களின் வருமானத்தில் கண்மூடிதனமாக கையை வைத்துவிடக்கூடாது. அப்படி வைத்தோம் என்றால், அது நுகர்வோரையே பாதிக்கும்.
ஏனென்றால், இழந்ததை திரட்டுவதற்காக, வர்த்தகர்கள் நுகர்வோரின் பொக்கட்டுகளிலேயே கையை வைப்பர் இதுதான் யதார்த்தமானது. நுகர்வோர்தான் எங்களுடைய பாதுகாவலன் என்பதை எந்நேரமும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.
அதேபோல, நுகர்வோரின் தலைகளில் இடிவிழுவதைப் போன்ற திட்டங்களை ஒருநாளும் இந்தச் சபை வகுத்துவிடக்கூடாது.
எங்களுடைய நோர்வூட்  பிரதேச சபையின் ஊடான சேவைகள், பெருந்தோட்டங்களையும், அங்கு வாழ்கின்ற மக்களையும் சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய அவாவாகும்.
நடைமுறையில் இருக்கின்ற சட்டத்தின் ஊடாக அதனைச் செய்யமுடியாது.
என்றாலும், பிரதேச சபைச் சட்டங்களை திருத்துவதற்கான ஏற்பாடுகள் பாராளுமன்றத்தில் முன்னெடுக்கப்படுவதாக அறிகின்றேன்.
அந்தச் சட்டம் திருத்தப்பட்டு, நிறைவேற்றப்படவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
தவிசாளர் அவர்களே!,
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாம் எப்போதுமே, மக்களுக்காக சேவைச் செய்யவேண்டும் இல்லையே, மக்கள் எம்மை நிராகரித்துவிடுவர் என்பது திண்ணம்.
ஆகையால், அரசியல், நிறம், மதம், இனம் மற்றும் ஏனைய சகல பேதங்ளையும் மறந்து, 21 பேரும் ஒன்றோடு ஒன்றாக கைகோர்த்து, எதிர்வரும் 3 வருடங்கள் எட்டு மாதங்களில்; பயணிப்பதன் ஊடாக, இலங்கையிலேயே சிறந்ததொரு பிரதேச சபையாக, நோர்வூட் பிரதேச சபையை உருவாக்கமுடியும் என்று நம்பிக்கை என்னுள் ஏற்பட்டுவிட்டது.
அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து திடசங்கட்பம் பூணுவோம் எனக்கூறிக்கொண்டு, எனக்காக வாக்களித்த சமர்வில் வட்டார மக்ளுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கின்றேன்
நன்றி,
வணக்கம்
மு.இராமச்சந்திரன், எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here