மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : குறைக்கப்படவுள்ள மின்கட்டணம்

0
119

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.மேலும், மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்குத் தேவையான பரிந்துரைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மீண்டும் முன்வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தெற்காசியாவில் அதிக மின்சாரக் கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை உள்ளதாக வெரிட்டே நிறுவனத்தின் புதிய புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை மக்கள் சராசரியாக 2.5 இலிருந்து 3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணத்தை செலுத்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு நிலையிலேயே, இம்மாத இறுதிக்குள் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here