மக்களுடைய பிரச்சினைகளையும் அபிலாசைகலையும் அன்றாட தேவைகளையும் கொண்டு பேசுவதில் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர்கள் முன்வரவேண்டும்.
கண்ணி அமர்வில் நோர்வூட் பிரதேசசபையின் தவிசாளர் தங்கராஜ்,கிசோகுமார் தெரிவிப்பு
மக்களுடைய பிரச்சினைகளையும் அபிலாசைகளையும் அன்றாட தேவைகளையும் கொண்டு பேசுவதில் நோர்வூட் பிரதேச்சபையின் அனைத்து உறுப்பினர்களும் முன்வர வேண்டுமென நோர்வூட் பிரதேச்சபையின் தவிசாளர் தங்கராஜ் கிசோகுமார் 10.04.2018. செவ்வாய் கிழமை இடம் பெற்ற கண்ணி அமர்வின் போது தெரிவித்தார்.
இந்த கண்ணி அமர்வின் போது நோர்வூட் பிரதேச்சபையின் உதவி தவிசாளர் காளிமுத்து சிவசாமி, இ.தொ.கா.வின் பிரதேசசபை உறுப்பினர்கள், ஜக்கிய தேசிய கட்சியின் பிரதேசசபை உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதேசசபை உறுப்பினர், ஆகியோர் கலந்து கொண்டதோடு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினர் பாலகிருஸ்னன் சிவநேசன் இன்று இடம் பெற்ற கண்ணிஅமர்வில் கலந்து கொள்ளவில்லை.
இதேவேலை மேலும் கருத்து தெரிவித்த நோர்வூட் பிரதேசசபையின் தவிசாலர் மக்களுடைய அபிவிருத்தி திட்டங்கல் மக்களுடைய அபிவிருத்திசார் சேமநலன்கள் அதிகரிக்க கூடிய பொருளாதார நலன்ங்கல் அதிகரிக்க கூடிய யோசனைகலையும் முன்வைக்க வெண்டுமெனவும் கேட்டு கொண்டார்.
நோர்வூட் பிரதேசசபையில் வலப்பாற்றாகுரை மற்றும் ஏனைய பிரச்சினைகள் காணபட்டாலும் அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்திடம் இருந்து அனுமதியினை பெற்று கொள்வதற்க்காக இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான அமைச்சர் பைதர் முஸ்தப்பா அவர்களோடு கலந்துரையாடப்பட்டு மனு ஒன்று வழங்கபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார் .
இதேவேலை நாட்டின் நிதிஅமைச்சர் மங்கள சமரவீர அவர்களையும் சந்திந்து கலந்துரையாடபட்டபோது நோர்வூட் பிரதேச்சபைக்கு தேவையான நிதி மற்றும் வளங்கல் ,அலுவலகத்தை கொண்டு நடத்துவதற்கான உத்தியோகத்தர்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் நிதி அமைச்சரோடு இ.தொ.கா.வின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே கட்சி ரீதியாக நாங்கள் எமது பிரதேச்சபையில் அமர்ந்து இருந்தாலும் நாங்கள் பொதுவாக மக்களுடைய பிரச்சினைகளை மாத்திரம் பேசுவதற்கு ஒன்றாக இணைந்து இருக்கின்றோம்.
ஆகவே எமது நோர்வூட் பிரதேசசபையை நாட்டின் முதலாவது உள்ளுராட்சி மன்ற சபையாக உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமெனவும் கேட்டுகொண்டார்.
(பொகவந்தலாவ நிருபர்.எஸ்.சதீஸ்)