மக்களை ஏமாற்றுகிறது இதொகா : வேலுகுமார் குற்றச்சாட்டு!

0
75

பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் நடத்துகின்றோம் என்று இன்று ஒட்டுமொத்த பெரும்தோட்ட தொழிலாளர்களும் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமைக்கு இலங்கையை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொது செயலாளரும் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பி.யான எம். வேலுகுமார் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இன்று பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினை எரியும் பிரச்சினையாக மாறியுள்ளது .2021 இலிருந்து ஒரு சதமெனும் அவர்களுக்க சம்பள அதிகரிப்பு செய்யப்படவில்லை. பேச்சுவார்த்தை நடத்துகின்றோம் நடத்துகின்றோம் என்று இன்று ஒட்டுமொத்த பெரும்தோட்ட தொழிலாளர்களும் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலைமைக்கு இலங்கையை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் பொது செயலாளரும் முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்.

இலங்கையை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் இந்த அரசிடமிருந்து மிகப்பெரிய சலுகையாக ஆளுநர் பதவியை பெற்றுக்கொண்டுள்ளார். அதேபோல் பொது செயலாளர் கம்பெனிகளிடமிருந்து அனுசரணைகளி வாங்கி மலையகம் 200,தேசிய பொங்கல் விழா என தென்னிந்தியாவிலிருந்து நடிகைகளை கொண்டு வந்து நாடகங்களை அரங்கேற்றி கம்பெனிகளிடமிருந்து சலுகைகளை பெற்றுக்கொண்டார்.

தலைவர் அரசிடம் சலுகையைப்பெற, பொது செயலாளர் கம்பெனிகளிடம் சலுகைகளைப்பெற இன்று தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்து அந்த தொழிலாளர்களின் நியாய சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாத , கம்பெனிகள் கண்டுகொள்ளாத நிலைமை ஏற்பட்டதற்கு இந்த இருவரும் பொறுப்புக்கூற வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here