மஞ்சள் பூசிக் குளிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

0
149

முகத்திற்கு பூசுவதற்கு வித விதமாய் அழகு சாதன கிரீம்கள் வந்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பது இன்றைக்கு மறந்தே போய்விட்டது. ஆனால் மஞ்சள் பூசி குளிப்பவர்களுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மஞ்சள் பூசிய முகத்துக்கென்று ஒரு தனி அழகு உண்டு. ஆனால், அது வெறும் அழகோடு நிற்காமல் அதில் ஏராளமான மருத்துவ குணங்களும் உண்டு என்பது இன்றைய இளம் யுவதிகளுக்குப் புரிவதில்லை.

இன்றைய இளம் பெண்கள் பலருக்கும் சோப்பு போட்டு குளித்த பின்னர் மஞ்சள் பூசி குளிப்பதன் மகிமை தெரியாமல் போனதன் காரணம் அதைப் பற்றி சரியான புரிதலும், விழிப்புணர்வும் இல்லாமல் போனதுமே காரணம்.

எனவேதான் மஞ்சள் பூசி குளித்தவர்கள் கூட, நாளடைவில் தோழிகள் சிரிக்கிறார்களே என்று தற்போது மஞ்சளை மறந்தே விட்டார்கள்.

மஞ்சள் பூசி குளிக்கும் பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை உருவாக்கும் ஹியூமன் பப்பிலோமா வைரஸ் (எச்பிவி) அழிக்கப்படுவதும், புற்றுநோய் ஏற்பட்டவர்களுக்கு அது ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்படுவதும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் மகிமை கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுத்தும் எச்பிவி கிருமிகள் கருப்பை வாயில் இருப்பது கண்டறியப்பட்ட பெண்களில் பாதி பேருக்கு மஞ்சள் கொடுத்து பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

சிலருக்கு எப்போதுமான மருந்துகள் மட்டும் கொடுக்கப்பட்டது. அதில் மஞ்சள் பயன்படுத்தியவர்களுக்கு எச்பிவி கிருமியால் ஏற்பட்ட பாதிப்பு சரியாகியிருந்ததும், மேலும் பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனி பெண்கள் குளிக்கும் போது, மஞ்சள் தேய்த்து குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அலுவலகம் மற்றும் பள்ளிக்குச் செல்லும் பெண்கள் விடுமுறை நாட்களிலாவது மஞ்சள் பூசுவது அவசியம் என்கின்றனர் நிபுணர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here