மடக்கும்புர தொகுதியில்போட்டியிடும் வேட்பாளரை தொலைபேசியில் மிரட்டல்!!

0
102

உள்ளுராட்சி மன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்துதாமரை மொட்டு சின்னத்தில் கொத்மலை பிரதேச சபைக்கு மடக்கும்புர தொகுதியில்போட்டியிடும் வேட்பாளர் கிருஸ்ணமூர்த்தி சிவராஜன் என்பவர் தன்னை மலையகத்தைபிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவரின் சகாக்கள் தொலைபேசியில்மிரட்டுவதாக தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் 29.1.2018 திங்கட்கிழமை பிற்பகல்முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

குறித்த அமைச்சரின் சகாக்கள் தன்னை தினமும் தொலைபேசியில் மிரட்டுவதாகவும் இதனால் தான் அச்சமடைந்துள்ள நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளதாகவும் மேலும் இதுதொடர்பாக நுவரெலியா மாவட்ட தேர்தல் கண்காணிப்பு அலுவலகத்திலும் முறைபாடு ஒன்றை அளித்துள்ளதாகவும் குறித்த வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here