மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூமோ பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்திசெய்து, விற்பனை செய்துவந்த 35 வயது நபரொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மடுல்சீமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, கசிப்பு உற்பத்தி செய்யப்பட்ட இடம் சுற்றிவளைக்கப்பட்டது.
இதன்போது 160, 750 மில்லி லீட்டர் கோடாவும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்த உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
(தகவல் – ராமு தனராஜா)