மடூல்சீமை – பிட்டமாறுவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பிட்டமாறுவ கல்பொத்தவெல பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் வீட்டின் முன் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்துக்கு சென்று விளக்கு ஏற்றும் போது குளவி கலைந்து குறித்த நபரை தாக்கியுள்ளது .
இதன் போது வீட்டில் உள்ளே சென்று தன்னை குளவி தாக்கியதாக கூறிவிட்டு படுத்து உறங்கி யவர் காலையில் எழும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.இதன் போது வீட்டார் பொலிஸாருக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சம்பவ இடத்திற்கு விரைந்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக பதுளை பொது வைத்தியசாலையின் பிரேத அரையிறுதியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா