மட்டக்களப்பு நாவலடி கடற்கரையில் கரைவலையில் ஈடுபட்ட மீனவர்களின் வலைகளில் அதிகளவான கடற் பாம்புகளே சிக்கியுள்ளன, இப்படி ஒருபோதும் கடற் பாம்புகள் தமது வலைகளில் சிக்கியதில்லை என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
இப்படி பெருந்தொகையான பாம்புகள் கரைநோக்கி நகர்வது சுனாமியின் அறிகுறியாக இருக்கலாம் என மீனவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்பட்ட காலத்தில் அதிகளவான பாம்புகள் மட்டக்களப்பு ஏரியில் படையெடுத்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய காலமாக இந்திய ஆய்வாளர் ஒருவர் டிசம்பர் மாதம் இந்திய பெருங்கடலில் சுனாமி ஏற்படும் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீனவர்கள் அச்சம் கொண்டுள்ளனர் .