கண்டி – பன்வில – பபருல்ல வீதி ஹூலுகல பிரதேசத்தில் மண் சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்வில காவற்துறை இதனை தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அதிக மழையுடனான காலநிலை காரணமாக இன்று அதிகாலை இவ்வாறு மண் சரிவு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குறித்த வீதியில் பயணிக்கும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்டுத்துமாறு காவற்துறை கோரிக்கை விடுத்துள்ளது.