மண்சரிவில் பாதிக்கப்பட்ட 5 ஆயிரம் குடும்பமக்ளுக்கு ஆறு மாத காலத்தில் வீடுகள் அமைக்கப்படும்; அமைச்சர் திகா உறுதி!

0
103

நுவரெலியா மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தினை எதிர்நோக்கியுள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்கு ஆறுமாதப்பகுதியில் புதிய தனி வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை அடுத்து 5 ஆயிரம் குடும்பங்கள் மண்சரிவு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாக இனங்காணப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவருக்கும் வீடுகளை கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவினால் பாதிக்கப்பட்டு வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும் அடுத்த வாரம் முதல் வீடுகளை கட்ட ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், இந்த மண்சரிவானது நவரெலியா மாவட்டத்தை மாத்திரம் பாதிக்கவில்லை. பதுளையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் விரைவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என மலைநாட்;டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் சீரற்ற காலநிலையால் நோர்வூட், மஸ்கெலியா, மொக்கா, காட்மோர், தலவாக்கலை, மடகும்புர, லிந்துல ஆகிய பகுதிகளில் மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை பார்வையிடுவதற்காக 27.05.2018 அன்று விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவத்தார்.

இதன் போது இடர் முகாமைத்துவ நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் குறைபாடுகளையும் கேட்டறிந்ததுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதாகவும் இதன் போது அமைச்சர் உறுதியளித்தார்.

இந்த விஜயத்தின் போது அம்பகமுவ பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் ஆர்.வி.பி சுமன சேகர, தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்த்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

(க.கிஷாந்தன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here