தலவாகலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தலவாகலை டெரீக்கிலோயர் தோட்டத்தில் 33குடும்பங்களை சேர்ந்த 100பேர் வெளியேற்றபட்டுள்ளதாக தலவாகலை பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த இரண்டு தினங்களாக பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட மண் சரிவு காரணமாக இரண்டு குடியிருப்புகள் சேதமடைந்துள்ளமை அடுத்தே ஏனைய குடும்பங்களும் வெளியேற்றபட்டதாக தெரிவிக்கபடுகிறது.
குறித்த தோட்ட பகுதியில் குடியிருப்பு ஒன்றின் அடிபகுதியில் இருந்து நீர் உற்றெடுத்து செல்வதாகவும் தெரிவிக்கபடுகிறது. இதேவேலை தேசிய மண் பரீசோதனை ஆய்வாளர்கள் குறித்த தோட்டபகுதிக்கு வரவழைக்கபட்டு மண் சரிவு அபாயம் காணபடுவதை உறுதிபடுத்திய பிறகே இந்த 33குடும்பங்களும் 23.05.2018. புதன் கிழமை காலை வெளியேற்றபட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த மண் சரிவு அபாயத்தின் காரணமாக அட்டன் நுவரெலியா பிரதான வீதிக்கு அருகாமையில் பதுளை கொழும்பு புகையிரத வீதியும் காணபடுவதாக தெரிவிக்கபடுகிறது.
எனவே எதிர் காலங்களில் மலையகத்தின் காலநிலை மப்பும் மந்தாரமுமாக காணபடுகின்றமை குறிப்பிடதக்கது
பொகவந்தலாவ நிருபர். ஏஸ்.சதீஸ்