நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நோர்வூட் நகரில் உள்ள எண்ணெய் நிரப்பு நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலை முதல் மண்ணெண்ணெய் பெறுவதற்கு பல மணித்தியாலங்கள் காத்திருந்த பின் 3 மணி அளவில் எண்ணெய் வராது என்று தெரிவித்ததால் காத்திருந்த மக்கள் ஆத்திரமடைந்து வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்த நபர் ஒருவர் பொலிஸார் தள்ளிக்கொண்டு சென்றதனால் அங்கு அமைதியற்ற சூழல் உருவானது.
இதனால் நோர்வூட் மஸ்கெலியா நோர்வூட் பொகவந்தலா ஊடான பொது போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது.
அதனை தொடர்ந்து நோர்வூட் பொலிஸார் நிலைமையினை சுமுகமான நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்த போதிலும் அது பயனளிக்கவில்லை இன்று அதிகாலை முதல் மண்ணெண்ணெய் வரும் என்று தெரிவித்துவிட்டு இப்போது இல்லை என்றால் நாங்கள் என்ன செய்வது இந்த அரசாங்கமும் அதிகாரிகளும் மக்களை மாடுகள் என்று எண்ணியுள்ளார்களா அல்லது மக்கள் படும் அவலம் இவர்களுக்கு தெரியவில்லையா என பலரும் தனது ஆதங்கத்தை வெளியிட்டனர்
இது குறித்து மற்றுமொருவர் கருத்து தெரிவிக்கையில் இன்று அரங்கம் என்று ஒன்றுமில்லை அவர்கள் இன்று அனைத்தையும் பெற்றுக் கொண்டு மிகவும் சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் வாக்களித்த மக்களின் வாழ்க்கை வீதிகளில் சீரழிகின்றன நாளுக்கு நாள் பொருட்கள் விலையேறுவதற்கு போதாமைக்கு பல மணித்தியாலங்கள் மக்கள் காத்திருக்க வைக்கின்றனர் மலையகத்தில் இருந்து வாக்குகளை பெற்று சென்றவர்கள் மக்களின் பிரச்சனைகளை கண்டும் காணாது போல் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றனர் இதற்கு மேலும் இவர்களுக்கு வாக்களிப்பார்களேயானால் நிச்சயம் அவர்கள் மனிதர்களாக இருக்க முடியாது என தெரிவித்தனர்.
எது எவ்வாறான போதிலும் நாட்டு மக்கள் படும் துன்பங்களை உணர்ந்து பொறுப்பு வாய்ந்தவர்கள் சரியான தீர்வினை பெற்றுக் தர வேண்டியது அவர்களது கடமையும் பொறுப்பும் ஆகும்.
மலைவாஞ்ஞன்