கண்டி சங்கமித்தா மாவத்தையில் வீடொன்றை நிர்மாணித்து கொண்டிருந்த இருவர் மீது மண் மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.
இன்று காலை குறித்த இருவரும் நிர்மாண பணிக்காக மண் மேட்டை வெட்டிக் கொண்டிருந்த வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் காயமடைந்த இருவரும் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கின்றனர்.