மதிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் நாட்டில் மிதிக்கப்படுகின்றார்கள். புஸ்பா விஸ்வநாதன் கண்டனம்.

0
72

சமுதாயம் எனும் கோட்டையின் கதவுகள் ஆசிரியர்கள் மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ள நபர்கள் குரு. நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசான். குருகுலக் கல்வி முறையில் இருந்து வகுப்பறை கல்விக் கூடங்கள் என மாற்றம் ஏற்பட்ட போதிலும், மாற்றம் காணாதவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே.சமுதாயத்திற்காக தன்னை அர்ப்பணித்து செயலாற்றும் அதிபர் ஆசிரியர்களின் போராட்டம் நியாமானது.அவர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும்.அரசாங்கம் அவர்களின் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டும்.ஆனால் அவர்களை நசுக்க முற்படுகின்றனர்.இது ஒரு ஜனநாயக அரசாங்கத்திற்கு நல்லதல்ல என மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தெரிவிக்கையில் இன்று அரசாங்கத்தோடு இருக்கும் மக்கள் பிரதிநிகள் நிச்சயமாக யோசிக்க வேண்டும்.தான் இவ்விடத்திக்கு வருவதற்கு ஊன்றுகோலாய் இருந்தவர்கள் ஆசிரியர்கள்.நமக்கு ஒரு வழிகாட்டியாய் இருந்ததாலே இவ்விடத்தில் நிற்கின்றோம்.என நினைத்து அவர்களின் பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமென தீர்த்து வைக்க முன்வந்திருக்க வேண்டும்.ஆனால் தமது பிரச்சனைகளை கேட்க வந்தவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்,அடி, உதை என அராஜகமான செயலை அரசாங்கம் செய்வதை மலையக தொழிலாளர் முன்னணியின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

மலையக தொழிலாளர் முன்னணி பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு மட்டும் குரல் கொடுக்கும் தொழிற்சங்கம் கிடையாது. சமூகத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் அனைவருக்கும் ஒரு பிரச்சனையென்றால் அவர்களின் நலன்சார்ந்து குரல் கொடுக்கும் ஒரு தொழிற்சங்கம் என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவாக காணப்படும் மலையக தொழிலாளர் முன்னணிக்கு ஆசிரியர்களின் பிரச்சனைகளையும் அவர்கள் சமூகத்தில் படும் இன்னல்கள் தொடர்பிலும் நன்கு அறிவோம்.காரணம் சமூகத்தோடு ஒன்றித்து பயணித்து கொண்டிருக்கின்றோம்.எனவே எந்த பிரச்சனைக்கும் நாங்கள் முன்னின்று குரல் கொடுப்போம்.

இனியாவது தம்மை ஏணியாக நின்று ஏற்றிவிட்ட ஆசிரியர்களின் நிலையறிந்து அவர்களின் சம்பளபிரச்சனை உட்பட அனைத்து பிரச்சனைகளை தீர்க்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையென்றால் ஒன்றிணைந்த அதிபர்,ஆசிரியர் தொழிற்சங்கங்களோடு மலைய தொழிலாளர் முன்னணியும் அவர்களோடு போராட்டத்தில் குதிக்கும் என முன்னணியின் பொதுச்செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here